Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
அதிமுக தென்சென்னை வேட்பாளர் ஜெயவர்த்தன் மீது வழக்குப்பதிவு

அதிமுக தென்சென்னை வேட்பாளர் ஜெயவர்த்தன் மீது வழக்குப்பதிவு

Minnambalam 2 years ago

ரிய அனுமதியின்றி கூட்டம் கூட்டியதாக அதிமுக தென்சென்னை வேட்பாளர் ஜெயவர்த்தன் மீது இன்று (மார்ச் 23) வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், அரசியல் கட்சிகள் தேர்தல் ஏற்பாடுகளில் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றன.அந்த வகையில், தமிழகத்தில் அதிமுக சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் மார்ச் 20ஆம் தேதி வெளியிடப்பட்டது.அதன்படி, அதிமுக சார்பில் தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்த்தன் போட்டியிட உள்ளார்.இந்நிலையில், சென்னை வேளச்சேரி பகுதி காந்தி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தின்போது, தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி, பொதுமக்களுக்கு இடையூறாக கட்சிக் கொடிகளைக் கட்டியதுடன், முறையான அனுமதியின்றி கூட்டம் கூட்டியதாகவும் புகார் எழுந்துள்ளது.இதனைத் தொடர்ந்து, தேர்தல் பறக்கும் படையினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அதிமுக தென்சென்னை வேட்பாளர் ஜெயவர்த்தன் மற்றும் தனியார் திருமண மண்டப உரிமையாளர் பாலாஜி மீது தரமணி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.இந்துசெய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…நடைபயிற்சி மேற்கொண்டு வாக்கு சேகரித்த ஸ்டாலின்வேலைவாய்ப்பு: தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் பணி!

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam