Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
பேடிஎம் தெரியும் பே பிஎம் திட்டம் தெரியுமா? - பிடிஆர் புது விளக்கம்!

பேடிஎம் தெரியும் பே பிஎம் திட்டம் தெரியுமா? - பிடிஆர் புது விளக்கம்!

Minnambalam 2 years ago

த்திய விசாரணை அமைப்புகள் மூலம் வழக்குகளில் சிக்கியவர்கள் பே பிஎம் என்கிற திட்டத்தின் மூலம் தேர்தல் பத்திரத்தில் பணம் செலுத்துகிறார்கள் என்று தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று (ஏப்ரல் 9) தெரிவித்துள்ளார்.

மதுரை நாடாளுமன்ற தொகுதி சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து மத்திய தொகுதிக்கு உட்பட்ட தளவாய் அக்ரஹாரம் தாளமுத்து பிள்ளை சந்து, செல்லத்தம்மன் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று (ஏப்ரல் 9) பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசும்போது,

"அதிமுக ஒரு விளம்பரத்தை வெளியிட்டு பொய் பிரச்சாரத்தை செய்து வருகிறது. அதில் தாலிக்கு தங்கம் திட்டம் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நிறுத்தி விட்டார்கள் என்று பச்சை பொய் சொல்கிறார்கள். சட்டமன்றத்திலேயே இது குறித்து நான் உண்மையை சொல்லி இருக்கிறேன். கடந்த அதிமுக ஆட்சியில் நான்கு ஆண்டுகளாக தாலிக்கு தங்கம் திட்டத்தை நிறுத்தி வைத்திருந்தார்கள். அதை அவர்கள் வெளிப்படையாக சொல்லவில்லை, அவர்கள் தாலியும் வாங்கவில்லை தங்கமும் வாங்கவில்லை நிதியும் அதற்காக ஒதுக்கவும் இல்லை.

ஆட்சிக்கு வந்த பிறகு இந்தத் திட்டத்தை துவக்குவது என்பது முடியாத காரியம். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் முடிந்தவர்களில் இருந்து தற்போது வரை அனைவருக்கும் இந்த திட்டத்தை செயல்படுத்துவது என்பது கடினமான காரியம்.

எனவே, அதிமுக நிறுத்தி வைத்த திட்டத்தினை மீண்டும் எங்களால் துவக்க முடியாது என்ற காரணத்தினால் பெண் கல்விக்காக அவர்கள் ஊக்கத்திற்காக மாதம் 1000 ரூபாய் என்கிற புதுமைப்பெண் திட்டம் என்ற திட்டத்தை செயல்படுத்தினோம்.

பெண்கள் கல்வி பெறுவதற்காகவே இத்தகைய மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை திட்டம் செயல்படுத்தினோம். தாலிக்கு தங்கம் என்கிற திட்டத்தை விட சிறப்பான திட்டமாக புதுமைப்பெண் கல்வித் தொகை திட்டம் துவக்கப்பட்டது.

இது சாதாரண தேர்தல் அல்ல, மிக முக்கியமாக நடக்க இருக்கின்ற தேர்தல். இந்தியாவில் ஜனநாயகத்தை படுகொலை செய்து பணநாயகத்தின் மூலம் ஆட்சி செய்து கொண்டிருக்கின்ற பாஜக அரசு மேல் பல்வேறு குற்றச்சாட்டுகள் இருக்கின்றன,

பங்களாதேசை விட இந்திய பொருளாதாரம் சரிவை சந்தித்துள்ளது. இந்த உலகத்திலேயே ஊழலைப் பற்றி பேசுவதற்கு ஒரு கட்சிக்கு தகுதி இல்லை என்றால் அது பாஜக தான்.

இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு இவர்களால் ஊழல்வாதிகள் என்று வழக்கு போடப்பட்ட 25 நபர்கள் பாஜகவின் வாஷிங் மெஷின் என்ற திட்டத்தால் அனைவரும் சுத்தமாகி விட்டார்கள். தேர்தல் பத்திரம் மூலம் லாபமே இல்லாத பல கம்பெனிகள் பல நூறு கோடிகளை தானமாக பிஜேபிக்கு கொடுத்துள்ளார்கள்.

மேலும், யாரெல்லாம் ஐ.டி, இ.டி, சி.பி.ஐ மூலம் வழக்கு விசாரணையில் மாட்டிக் கொண்டார்களோ, அவர்கள் எல்லாம் பேடிஎம் என்பது போல பே பிஎம் என்கிற திட்டத்தில் தேர்தல் பத்திரத்தில் பணம் செலுத்துகிறார்கள். அவர்கள் மேல் இருந்த வழக்குகள் எல்லாம் ரத்து செய்யப்படும். பே பி.எம். திட்டத்தை உருவாக்கி இருக்கிறார்கள், இந்த பாஜக அரசு இன்னொரு முறை ஆட்சிக்கு வந்தால் இந்தியா என்கிற ஒரு நாடும் இந்திய அரசியலைமைப்பின் மக்களாட்சி முறையும் நீடிக்காது" என்று தெரிவித்தார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ராஜ்நாத் சிங் தரிசனம்!

ஒர்க் பிரஷ்ஷர்…ஆடிட்டரை நடுரோட்டில் தாக்கிய ஊழியர்கள்…பெங்களூரை அதிரவைத்த சம்பவம்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam