Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
பியூட்டி டிப்ஸ்: கோடைக்காலமும் நகைப் பராமரிப்பும்!

பியூட்டி டிப்ஸ்: கோடைக்காலமும் நகைப் பராமரிப்பும்!

Minnambalam 2 years ago

கைகள் அணியும் பழக்கம் உள்ள அனைவரும் கோடைக்காலத்தில் அதன் பராமரிப்பு குறித்தும் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

கொளுத்தும் வெயிலில் தொடர்ந்து நகைகளை அணிவது சருமத்தை எரிச்சலடையச் செய்யலாம். அதோடு நகைகளின் இடுக்கில் அழுக்குகள் சிக்கும் நிலையில், ஏதேனும் காயங்கள் (open wounds) இருந்தால் அவை நோய்த் தொற்றுகளுக்கு வழிவகுக்கும். தூக்கத்தின்போது நகைகள் உடைந்துவிடுவதற்கும் வாய்ப்புண்டு.

உடற்பயிற்சி செய்வதற்கும் முன் நகைகளைக் கழற்றிவிடுவது நல்லது. விரைவாக நகைகளைச் சுத்தம் செய்ய ஒரு மென்மையான துணியினால் அவற்றைத் துடைக்கலாம். முழுமையாகச் சுத்தம் செய்ய வாரத்துக்கு ஒருமுறை 10-15 நிமிடங்கள் வரை வெதுவெதுப்பான சோப்பு நீரில் நகைகளை ஊற வைக்கலாம்.

வேலைப்பாடுகள் அதிகமுள்ள சிக்கலான நகைகளுக்கு மென்மையான பிரஷ் பயன்படுத்தி நீரில் சுத்தம் செய்து பஞ்சு இல்லாத துணியால் துடைக்கலாம்.

கற்கள் உள்ள நகைகளுக்குச் சிறப்பு கவனிப்பு தேவைப்படலாம். தெளிவாகத் தெரியாவிடில் அவற்றை நீரில் ஊற வைத்துக் கழுவுவதைத் தவிர்த்து விடுங்கள்.

கோடைக்காலத்தில் 24 மணிநேரமும் நகைகளை அணிய வேண்டிய அவசியமில்லை. அவற்றை அடிக்கடி கழற்றி வைத்துச் சுத்தப்படுத்திப் பயன்படுத்தலாம். இது நகைகளின் நீடித்த நாள் பயன்பாட்டுக்கு உதவும்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam