Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் விஜய் அபார வெற்றி

போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் விஜய் அபார வெற்றி

Minnambalam 2 weeks ago

வெக தலைவர் விஜய் தான் போட்டியிட்ட பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் அபார வெற்றியை பதிவு செய்துள்ளார்.

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில், சென்னை பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்துள்ளார். இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் முடிவில், அவர் மொத்தம் 1,12,719 வாக்குகள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஆர்.டி. சேகர் 62,307 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்தார். சுமார் 50,412 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளரை வீழ்த்தி விஜய் அபார வெற்றி பெற்றுள்ளார். அதேபோல், இத்தொகுதியில் போட்டியிட்ட பாமக வேட்பாளர் திலகபாமா 7,991 வாக்குகளையும், நாம் தமிழர் கட்சியின் வெற்றிக்குமரன் 4,841 வாக்குகளையும் பெற்று தோல்வியடைந்தனர்.

அதேபோல் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்யிட்ட விஜய் மொத்தம் 82,885 வாக்குகள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக கூட்டணி வேட்பாளர் 56,453 வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்தார். சுமார் 26,432 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளரை தோற்கடித்துள்ளார். இத்தொகுதியில் அதிமுக கூட்டணி 18,190 வாக்குகளையும், நாம் தமிழர் கட்சி 4,121 வாக்குகளையும் பெற்று பின்னடைவைச் சந்தித்தன.

பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை விஜய் பெற்றுக்கொண்டார். முன்னதாக சென்னை அடையாறில் உள்ள தனது பெற்றோர் சந்திரசேகர் - ஷோபா வீட்டிற்கு சென்ற விஜய் , அவர்களிடம் ஆசி பெற்றார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam