Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
புது ஹீரோவை புகழ்ந்த சீனு ராமசாமி.. ஃபர்ஸ்ட் லுக் இதோ..!

புது ஹீரோவை புகழ்ந்த சீனு ராமசாமி.. ஃபர்ஸ்ட் லுக் இதோ..!

Minnambalam 2 years ago

தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை போன்ற பல வெற்றி படங்களை இயக்கியவர் இயக்குநர் சீனு ராமசாமி.

கடைசியாக இவரது இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியான "மாமனிதன்" படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் சீனு ராமசாமியின் கண்ணே கலைமானே, மாமனிதன் ஆகிய படங்கள் பல சர்வதேச விருதுகளை வென்றதும் குறிப்பிடத்தக்கது.

அதனை தொடர்ந்து ஜிவி பிரகாஷை கதாநாயகனாக வைத்து "இடிமுழக்கம்" என்ற படத்தை சீனு ராமசாமி இயக்கி இருந்தார். ஆனால் இதுவரை அந்த படம் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை.

அதன்பிறகு "கோழிப்பண்ணை செல்லதுரை" என்ற ஓர் புதிய படத்தை சீனு ராமசாமி இயக்க போவதாக அறிவிக்கப்பட்டது.

சில மாதங்களுக்கு முன்பு கோழிப்பண்ணை செல்லதுரை படத்திற்கான படப்பிடிப்பு பெரிய குளத்தில் தொடங்கியது. இந்த படத்தில் ஏகன் என்பவரை கதாநாயகனாக அறிமுகம் செய்கிறார் சீனு ராமசாமி.

மேலும் பிரிகிதா சாக கதாநாயகியாக நடிக்க, நடிகர் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். விஷன் சினிமா ஹவுஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருக்கிறது.

இந்நிலையில் ஏப்ரல் 25ஆம் தேதி இந்த படத்தின் ஹீரோ ஏகனின் பிறந்த நாளை முன்னிட்டு கோழி பண்ணை செல்லதுரை திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக் குழு வெளியிட்டு இருக்கிறது. இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரில் கதாநாயகன் ஏகனுடன் நடிகர் யோகி பாபுவும் இடம்பெற்று இருக்கிறார்.

இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டை முன்னிட்டு, இயக்குநர் சீனு ராமசாமி தனது எக்ஸ் தளத்தில் "நான் இயக்கிய கோழிப்பண்ணை செல்லதுரை படத்திற்கு தன்னை ஒப்புக்கொடுத்து அர்ப்பணிப்போடு நடித்து என் இதயத்தில் பிள்ளை போல் நிறைந்த அறிமுக நாயகன். கலைச்செல்வன் ஏகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

கோழிப்பண்ணை செல்லதுரை படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

- கார்த்திக் ராஜா

பியூட்டி டிப்ஸ்: முழங்கைகளில் உள்ள கருமை மறைய எளிய தீர்வு!

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

கிச்சன் கீர்த்தனா: பப்பட் ரோல்

கடைசியில மண்டை மேல இருக்குற கொண்டைய மறந்துட்டேனே: அப்டேட் குமாரு

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam