Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Cook With Comali: இவங்க தான் அந்த 'நியூ' கோமாளிகள். வீடியோ உள்ளே!

Cook With Comali: இவங்க தான் அந்த 'நியூ' கோமாளிகள். வீடியோ உள்ளே!

Minnambalam 2 years ago

விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள குக் வித் கோமாளி சீசன் 5 வருகின்ற 27-ம் தேதி சனிக்கிழமை இரவு 9.3௦ மணிக்கு தொடங்குகிறது.

வெறுமனே சமையலுக்கு மட்டுமின்றி நகைச்சுவைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் நிகழ்ச்சியாக, குக் வித் கோமாளி திகழ்கிறது.

இதுவரை நான்கு சீசன்கள் நடந்து முடிந்துள்ளன. காமெடி தூக்கலாக இருப்பதால் இதற்கான ரசிகர்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளனர்.

இந்த 5-வது சீசனில் நடுவர்களாக மாதம்பட்டி ரங்கராஜ், செப் தாமு இருவரும் உள்ளனர். இந்த நிலையில் சீசனின் புதிய கோமாளிகள் பெயர்களை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.

அந்தவகையில் ராமர், குரேஷி, சுனிதா, புகழ் மற்றும் சரத் ஆகியோர் பழைய கோமாளிகளாக உள்ளனர்.

புதிய கோமாளிகளாக ஷப்னம், வினோத், கேமி மற்றும் அன்ஷிதா ஆகியோர் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்துள்ளனர்.

குக்குகள் யாரென்பதை இனிமேல் தான் சொல்வார்கள் என தெரிகிறது. எனவே அதுவரை நாமும் காத்திருக்கலாம்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சி வாரயிறுதியான சனி மற்றும் ஞாயிறுகளில், இரவு 9.3௦ மணிக்கு ஒளிபரப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

-மஞ்சுளா

சூரத்தில் நடந்தது பேரமா? போட்டியில்லாமல் பாஜக வென்றது எப்படி?

Ghilli: ரீ-ரிலீஸிலும் சாதனை… 3 நாட்களில் இத்தனை கோடியா?

14 வருடங்களுக்கு பிறகு… சிம்புவிற்கு ஜோடியான திரிஷா..!

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam