இரவின் நிழல் படத்திற்கு பிறகு தற்போது இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் 'டீன்ஸ்' என்ற புதிய படத்தை இயக்கியுள்ளார்.
பெரிய ஹீரோக்கள் யாரும் இல்லாமல் குழந்தைகளை மையப்படுத்தி இந்த படத்தை இயக்கி இருக்கிறார்.
சமீப நாட்களுக்கு முன்பு வெளியான 'டீன்ஸ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தான், முதன்முறையாக சென்சார் சான்றிதழுடன் வெளியான ஃபர்ஸ்ட் லுக் என்ற அந்தஸ்தை பெற்றது.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஒரு பழைய கிணற்றில் இருக்கும் பேயை பற்றி ஒரு சிறுமி கதை சொல்வது போல தொடங்கும் டீசரில், திகிலான காட்சிகள் அதிகம் இடம்பெற்றிருக்கிறது.

டீசரில் எந்த கதாபாத்திரத்தின் முகத்தையும் காட்டாமல் சஸ்பென்ஸ் ஆகவே முடித்திருக்கிறார் இயக்குநர். குழந்தைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் என்று சொன்னவுடன் ஒரு ஜாலியான கலர் ஃபுல் படமாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

