தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் அவரின் 51-வது படத்திற்கு 'குபேரா' என தலைப்பு வைக்கப்பட்டு உள்ளது.
தனுஷ் தற்போது தன்னுடைய 5௦-வது படமான ராயனில் மிகுந்த பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்தினை அவரே இயக்கி நடிக்கிறார்.
இதில் தனுஷ் உடன் இணைந்து செல்வராகவன், எஸ்.ஜே.சூர்யா, காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், பிரகாஷ்ராஜ், வரலட்சுமி, அபர்ணா பாலமுரளி, துஷாரா விஜயன் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.
இதனால் இப்படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது. இதனையடுத்து அவரின் நடிப்பில் உருவாகி வரும் 51-வது படத்தினை சேகர் கம்முலா இயக்குகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி என பான் இந்தியா படமாக இது உருவாகிறது.

இதில் தனுஷுடன் இணைந்து நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப், சவுரவ் கண்ணா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்திற்கு சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்தநிலையில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு இன்று (மார்ச் 8) படத்தின் டைட்டில் லுக் மற்றும் கிளிப்ம்ஸ் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர். அதன்படி இப்படத்திற்கு 'குபேரா' என படக்குழு பெயர் சூட்டியுள்ளது.

