Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
DRDO-ல கைநிறைய சம்பளத்தோட 'பெய்டு' இன்டர்ன்ஷிப்!

DRDO-ல கைநிறைய சம்பளத்தோட 'பெய்டு' இன்டர்ன்ஷிப்!

Minnambalam 1 week ago

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (DRDO) கீழ் இயங்கும் 'சாலிட் ஸ்டேட் பிசிக்ஸ் லேபரட்டரி' (Solid State Physics Laboratory - SSPL), 2026ஆம் ஆண்டிற்கான பட்டதாரி மற்றும் டிப்ளமோ அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்பத் தற்போது அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

"மொத்தம் 75 இடங்கள் தான் பாஸ், ஆனா இதுல இருக்குற எக்ஸ்பீரியன்ஸ் உங்க வாழ்க்கையையே மாத்திடும்!"

காலியிடங்கள் மற்றும் தகுதி விவரங்கள்

  • கிராஜுவேட் அப்ரண்டிஸ் (Graduate Apprentice) - காலியிடங்கள்: 40 இடங்கள். தகுதி: பி.இ அல்லது பி.டெக் (B.E / B.Tech) முடித்திருக்க வேண்டும். (Electronics, Mechanical, Computer Science, Physics, Material Science போன்ற துறைகள்). சம்பளம் (Stipend): மாதம் ரூ. 9,000 ரூபாய்.
  • டெக்னீஷியன் அப்ரண்டிஸ் (Technician Apprentice) + காலியிடங்கள்: 35 இடங்கள். தகுதி: சம்பந்தப்பட்ட துறையில் டிப்ளமோ (Diploma) முடித்திருக்க வேண்டும். சம்பளம் (Stipend): மாதம் 8,000 ரூபாய்.

நீங்க 2023, 2024 அல்லது 2025ல பாஸ்-அவுட் (Pass-out) ஆனவரா இருக்கணும் பாஸ். ஏற்கனவே வேற எங்கயாவது அப்ரண்டிஸ் முடிச்சிருந்தா இதுல சேர முடியாது.

எப்படி அப்ளை பண்ணனும்?

முதல்ல நீங்க மத்திய அரசோட NATS (National Apprenticeship Training Scheme) போர்ட்டல்ல (www.nats.education.gov.in) உங்க பேரை ரிஜிஸ்டர் பண்ணனும். அங்க ரிஜிஸ்டர் பண்ணதுக்கு அப்புறம், 'Solid State Physics Laboratory (SSPL)' நிறுவனத்தைத் தேடி அப்ளை பண்ணனும்.

கடைசி நாள்: மே 15 ஆம் தேதிக்குள் ஆன்லைன்ல விண்ணப்பிக்கணும். டைம் ரொம்பக் கம்மியா இருக்கு. நேட்ஸ் (NATS) போர்ட்டல்ல ரிஜிஸ்டர் பண்ணவே சில நாள் ஆகும். அதனால கடைசி நாள் வரைக்கும் வெயிட் பண்ணாம இன்னைக்கே அந்த வேலையை ஆரம்பிங்க. இங்க ஒரு வருஷம் நீங்க ஒர்க் பண்ணுனா, அதுக்கப்புறம் நீங்க எந்த பிரைவேட் கம்பெனிக்கு போனாலும் ரெட் கார்பெட் போட்டு வரவேற்பாங்க. ஏன்னா டி.ஆர்.டி.ஓ எக்ஸ்பீரியன்ஸ்ங்கிறது ஒரு 'கோல்டன் டிக்கெட்'.

இதுல எக்ஸாம் கிடையாதுங்கிறதால, உங்க டிகிரி அல்லது டிப்ளமோ மார்க் தான் உங்க தலையெழுத்தைத் தீர்மானிக்கும். எல்லா டாக்குமெண்ட்ஸையும் தெளிவா அப்லோட் பண்ணுங்க. இது டெல்லியில இருக்குற லேப். 'ஐயோ டெல்லி வரைக்கும் போகணுமா'ன்னு யோசிக்காதீங்க. ஒரு வருஷம் அங்க போயி ஒர்க் பண்ணுனா உங்க 'கம்யூனிகேஷன் ஸ்கில்' வேற லெவல்ல இம்ப்ரூவ் ஆகும்!

தகுதியுள்ள மாணவர்கள் www.nats.education.gov.in என்ற இணையதளம் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். கூடுதல் விபரங்களுக்கு டி.ஆர்.டி.ஓ-வின் அதிகாரப்பூர்வ தளமான www.drdo.gov.in பக்கத்தையும் ஒருமுறை செக் பண்ணிக்கோங்க.

சும்மா வீட்டுல உக்காந்து எக்ஸாமுக்கு படிக்கிறதை விட, இந்த மாதிரி ஒரு பெரிய நிறுவனத்துல உள்ள நுழைஞ்சு பிராக்டிகலா வேலை கத்துக்கிட்டா உங்க கரியர் ஜெட் வேகத்துல உயரும்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam