Dailyhunt
எடப்பாடி பழனிசாமி பாதுகாப்பு வாகனம் மோதிய விபத்தில் இளைஞர் பலி

எடப்பாடி பழனிசாமி பாதுகாப்பு வாகனம் மோதிய விபத்தில் இளைஞர் பலி

Minnambalam 1 week ago

திமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பாதுகாப்பு வாகனம் மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

எடப்பாடி பழனிசாமி நேற்று சிவகங்கை அரண்மனை வாசலில் அதிமுக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரம் முடிந்ததும் புதுக்கோட்டை நோக்கி புறப்பட்டுச் சென்றார். அப்போது, மதகுப்பட்டி மேலதெருவைச் சேர்ந்த ஆறுமுகம் (வயது 25) என்பவர் இருசக்கர வாகனத்தில் மின்வாரிய அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்தார். எடப்பாடி பழனிசாமியின் பாதுகாப்பு வாகனம் அவரது இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில், சம்பவ இடத்திலேயே ஆறுமுகம் உயிரிழந்தார்.

தகவல் அறிந்த மதகுப்பட்டி போலீசார் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam