Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
"என் மடியில் கனமில்லை" : ED சோதனை குறித்து ஆதவ் அர்ஜூனா

"என் மடியில் கனமில்லை" : ED சோதனை குறித்து ஆதவ் அர்ஜூனா

Minnambalam 2 years ago

டந்த 2 நாட்களாக தனது வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனை நிறைவு பெற்றதாக ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார்.

லாட்டரி அதிபர் மார்ட்டினின் மருமகனும், வாய்ஸ் ஆஃப் காமன் என்ற நிறுவனத்தின் நிறுவனரான ஆதவ் அர்ஜூனா, கடந்த மாதம் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். அதனைத்தொடர்ந்து அவருக்கு கட்சியில் மாநில துணைப் பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது.

இந்நிலையில், சட்டவிரோத பணப்பரிமாற்ற புகார் அடிப்படையில் சென்னை போயஸ்கார்டன் கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள ஆதவ் அர்ஜூனா வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று சோதனையில் ஈடுபட்டனர்.

நாடாளுமன்றத் தேர்தலில் விசிக சார்பில் அவர் பொதுத்தொகுதியில் போட்டியிடுவதற்காக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்த நிலையில் அமலாக்கத்துறை சோதனை பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து பலரும் அவர் மீது விமர்சனத்தை முன்வைத்தனர்.

இந்த நிலையில் அமலாக்கத்துறையின் சோதனை நிறைவு பெற்றதை அடுத்து ஆதவ் அர்ஜூனா தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், "எனது அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடந்த செய்தி ஊடகங்களில் பரவலாக வெளியாகியிருந்தது. நேற்று (09.03.2024) காலை தொடங்கி இன்று காலை வரை ஒருநாள் சோதனை நடத்தப்பட்டது.

பொதுவாழ்வில் வெளிப்படைத்தன்மையோடு இருக்கவேண்டியதன் அவசியத்தை எப்போதும் உணர்ந்திருக்கிறேன். அதனடிப்படையில் சோதனையின்போது அதிகாரிகள் கேட்ட அனைத்து சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் நம் தரப்பில் உரிய முழுமையான விளக்கங்கள் அளிக்கப்பட்டு சோதனை நிறைவுற்றது.

இதற்கிடையில் சமூக வலைத்தளங்களில் வலம் வரும் வதந்திகளுக்கும், அவதூறுகளுக்கும் யாரும் இடம் தர வேண்டாம். என் மடியில் கனமில்லை, அதனால் வழியில் பயமில்லை. புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் ஆகியோரின் சமத்துவ சித்தாந்தத்தின் வழிநின்று உறுதியோடு எனது பயணம் தொடரும்" என்று ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார்.

கிறிஸ்டோபர் ஜெமா

'திமுக கூட்டணியில் இணைந்தது ஏன்?' : வீடியோ வெளியிட்டு கமல் பதில்!

காங்கிரஸுக்கு போகிறதா கடலூர்?: ஒட்டுமொத்தமாக எதிர்க்கும் திமுகவினர்!

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam