"ஆர் ஆர் ஆர்" படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் ராம் சரணின் 15 வது படத்தை இயக்குநர் ஷங்கர் இயக்குவார் என்று அறிவிக்கப்பட்டது.
அந்த படத்திற்கு கேம் சேஞ்சர் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
கேம் சேஞ்சர் படத்திற்கு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கதை எழுத, ஷங்கர் திரைக்கதை எழுதி இருக்கிறார். இந்த படத்தில் ராம் சரண் ஒரு ஐ ஏ எஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.
ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரித்துள்ள இந்த படத்தில் நடிகர் ராம் சரணுடன் கியாரா அத்வானி, எஸ்.ஜே.சூர்யா, சுனில், ஜெயராம், அஞ்சலி, சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
கேம் சேஞ்சர் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது இயக்குநர் ஷங்கருக்கும் நடிகர் ராம் சரணுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்ததாக தகவல்கள் வெளியானது.
அதேபோல் தீபாவளிக்கு கேம் சேஞ்சர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு, அதன் பின் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகாமல் தள்ளி போனது.
இதனை தொடர்ந்து கேம் சேஞ்சர் படத்திற்கு பின் இயக்குநர் புச்சிபாபு சனா இயக்கத்தில் ராம் சரண் தனது 16வது படத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியானது.
மேலும் மார்ச் 27ஆம் தேதி நடிகர் ராம்சரனின் பிறந்த நாளை முன்னிட்டு கடந்த சில நாட்களாகவே அவரது பிறந்த நாள் கொண்டாட்டமாக தொடர்ந்து அவரது படங்களின் அப்டேட்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது.

