Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
GOLD RATE: மீண்டும் குறைந்த விலை. நகைக்கடை பக்கம் போகலாமா?

GOLD RATE: மீண்டும் குறைந்த விலை. நகைக்கடை பக்கம் போகலாமா?

Minnambalam 2 years ago

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் இன்று (மார்ச் 16) ரூபாய் 80 குறைந்து ரூபாய் 48,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் தங்கம் ரூபாய் 10 குறைந்து ரூபாய் 6,115-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூபாய் 88 குறைந்து ரூபாய் 53,368-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூபாய் 11 குறைந்து ரூபாய் 6,671-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியைப் பொறுத்தவரையில் 30 பைசா அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூபாய் 8௦.3௦-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூபாய் 8௦,300-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த ஒருவாரமாக தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கத்தின் விலை கடந்த இரண்டு நாட்களாக சற்றே குறைந்துள்ளது. வெள்ளியை பொறுத்தவரை கிராமிற்கு 3௦ பைசா அதிகரித்துள்ளது.

வரும் நாட்களில் தங்கத்தின் விலையானது மேலும் குறையுமா? இல்லை ஒரேயடியாக உச்சம் தொடுமா? என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்கலாம்.

-மஞ்சுளா

IPL: வரலாற்றில் முறியடிக்கவே முடியாத 5 சாதனைகள்!

இந்த மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000 உறுதி : அரசாணை வெளியானது!

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam