Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Good Bad Ugly: இணைந்த தெலுங்கு நடிகர். ஷூட்டிங் எப்போன்னு பாருங்க!

Good Bad Ugly: இணைந்த தெலுங்கு நடிகர். ஷூட்டிங் எப்போன்னு பாருங்க!

Minnambalam 2 years ago

மிழின் முன்னணி நடிகர் அஜித் நடிப்பில் தற்போது விடாமுயற்சி படம் உருவாகி வருகிறது. இப்படத்தைத் தொடர்ந்து, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் அஜித் நடிக்க உள்ளார்.

இப்படத்தில் 3 வேடங்களில் அஜித் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. நீண்ட வருடங்களுக்குப் பிறகு அஜித்தின் குட் பேட் அக்லி படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் மிகப்பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் இப்படம் 5 மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாகிறது. இதனால் இந்தி, தெலுங்கு, மலையாள திரையுலகினை சேர்ந்த முன்னணி நட்சத்திரங்களை இப்படத்தில் நடிக்க வைத்திட படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இந்தநிலையில் தெலுங்கு நடிகர் சுனில் இப்படத்தில் நடிக்க உள்ளது உறுதியாகி இருக்கிறது. காமெடி கலந்த முக்கிய கதாபாத்திரத்தில் இதில் அவர் நடிக்கிறார்.

படப்பிடிப்பினை சென்னை, ஹைதராபாத் மற்றும் ஜப்பான் நாட்டில் நடத்திட படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளனர். தற்போது முதற்கட்ட படப்பிடிப்பிற்காக ஈவிபி செம்பரம்பாக்கத்தில் (சென்னை) செட் அமைக்கும் பணிகள் தொடங்கி உள்ளன.

லேட்டஸ்ட் நிலவரத்தின்படி குட் பேட் அக்லி படப்பிடிப்பு ஜூன் 13-ம் தேதி சென்னையில் தொடங்குகிறது. மறுபுறம் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு வருகின்ற ஏப்ரல் கடைசியில் தொடங்கவிருக்கிறது.

சமீபத்தில் விடாமுயற்சி பட ஷூட்டிங்கின்போது அஜித்-ஆரவ் இருவரும் விபத்துக்குள்ளான வீடியோ வெளியாகி, சமூக வலைதளங்களை அதிர வைத்தது குறிப்பிடத்தக்கது.

-மஞ்சுளா

அரசு மரியாதையுடன் புகழேந்தி உடல் தகனம்!

ரெய்டில் சிக்கிய நயினார்: 4 கோடி பறிமுதல் வழக்கை விசாரிக்கும் ஐடி!

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam