Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Heatwave இந்த மாவட்டத்துல 'வெயில்' கொளுத்துதாம்!

Heatwave இந்த மாவட்டத்துல 'வெயில்' கொளுத்துதாம்!

Minnambalam 2 years ago

மிழ்நாட்டின் அதிக வெப்பம் பதிவான இடம் குறித்து வானிலை மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இன்று (மார்ச் 12) தொடங்கி மார்ச் 17 வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவக்கூடும்.

இன்று தொடங்கி மார்ச் 14 வரை தமிழகத்தின் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்படலாம்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் மழை எதுவும் பதிவாகவில்லை. மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவுமில்லை", என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல தமிழ்நாட்டில் வெப்பநிலை அதிகம் பதிவாகியுள்ள இடங்கள் குறித்தும் வானிலை மையம் தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி நாமக்கல் மாவட்டத்தின் கரூர் பரமத்தி 38.5 டிகிரி செல்சியஸ் உடன், முதலிடத்தை பிடித்துள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam