Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Heatwave: தமிழ்நாட்டில் அதிகம் 'வெயில்' அடிக்கும் மாவட்டம் இதுதான்!

Heatwave: தமிழ்நாட்டில் அதிகம் 'வெயில்' அடிக்கும் மாவட்டம் இதுதான்!

Minnambalam 2 years ago

மிழ்நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும் என, வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இன்று மார்ச் 26 தொடங்கி மார்ச் 3௦ வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

மார்ச் 31 மற்றும் ஏப்ரல் 1 ஆகிய இரண்டு நாட்களும் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

இன்று தொடங்கி மார்ச் 3௦ வரை தமிழகத்தின் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.

CWC 5: என்னை நீங்கள் எதிர்பார்க்கலாம்… வெளிப்படையாக சொன்ன பிரபலம்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

கடந்த 24 மணிநேரத்தில் மழை எதுவும் பதிவாகவில்லை. மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை", என தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் வெப்பநிலை அதிகம் பதிவாகியுள்ள இடம் குறித்தும் வானிலை மையம் தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி ஈரோடு மாவட்டம் 38.6 டிகிரி செல்சியஸ் உடன் முதலிடத்தை பிடித்துள்ளது.

வட தமிழக மாவட்டங்கள்: சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை.

புதுக்கோட்டை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு, கரூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர்.

தென் தமிழக மாவட்டங்கள்: ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, தேனி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், மதுரை.

-மஞ்சுளா

தூத்துக்குடியில் வேட்புமனுத் தாக்கல் செய்தார் கனிமொழி

முருகன் உட்பட மூவரும் ஒரு வாரத்தில் இலங்கை செல்வார்கள் : தமிழ்நாடு அரசு

மதிமுகவுக்கு பம்பரம்? தேர்தல் ஆணையம் சொன்ன முக்கிய பதில்!

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam