Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ஹீரோவாக அறிமுகமாகும் சீரியல் நடிகர். ஹீரோயின் யார் தெரியுமா.?!

ஹீரோவாக அறிமுகமாகும் சீரியல் நடிகர். ஹீரோயின் யார் தெரியுமா.?!

Minnambalam 2 years ago

விஜய் டிவி சீரியல்களில் தற்பொழுது டாப்பில் இருக்கும் சீரியல் 'சிறகடிக்க ஆசை'. தன் மனைவியின் கனவை நிஜமாக்க போராடும் ஒரு இளைஞனின் கதை தான் சீரியலின் கதைக்களம்.

இந்த சீரியல் குடும்ப தலைவிகள் மட்டுமல்லாது இளைஞர்களையும் கவர்ந்துள்ளது. இதில் மனோஜ் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகர் ஸ்ரீதேவா. இவரது கதாபாத்திரத்திற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

எந்த வேலைக்கும் செல்லாமல் சோம்பேறித்தனமாக இருக்கும் மனோஜ், தனது பணத்தையெல்லாம் காதலியிடம் இழக்க நேரிடுகிறது. காதலியும் ஏமாற்றிவிட்டு கனடா சென்றுவிடுகிறார்.

காதலியை தேடிச் செல்வது போல் தற்பொழுது எபிசோடுகள் ஆரம்பித்துள்ளன. சீரியல் மட்டுமின்றி தல அஜித் நடிப்பில் வெளியான, 'துணிவு' படத்திலும் அவர் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் நடிகர் ஸ்ரீதேவா தற்போது ஹீரோவாக அறிமுகம் ஆக உள்ளார். நடிகை திவ்யா துரைசாமி உடன் இவர் நடிக்கப் போகும் அடுத்த படத்தின் தகவல்களை, அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

வெள்ளித் திரையில் ஹீரோவாக அறிமுகமாகி இருக்கும் இவரை ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர். இன்ஸ்டாவில் மிகவும் பிரபலமான திவ்யா துரைசாமி சமீபத்தில் வெளியான 'ப்ளூ ஸ்டார்' திரைப்படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam