Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ஹெல்த் டிப்ஸ்: குறட்டையை விரட்டுவது எப்படி?

ஹெல்த் டிப்ஸ்: குறட்டையை விரட்டுவது எப்படி?

Minnambalam 2 years ago

பொதுவாக எந்த நோய்க்கும் தனிப்பட்ட காரணம் ஒன்று மட்டுமே இருக்காது. ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்ததாக பல கூட்டுக்காரணங்கள் இருக்கும்.

அதேபோல்தான் குறட்டையும்.

தலைவலியைப் போல குறட்டைக்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். குறட்டை ஒரு நோயல்ல. வேறு ஏதோ ஒரு பிரச்சினையின் அறிகுறி. 'நோய்நாடி நோய் முதல் நாடி' என்று வள்ளுவர் சொல்வது போல குறட்டை எதனால் வருகிறது என்ற காரணத்தைக் கண்டறிந்து சரி செய்தால் குறட்டையை விரட்டலாம்.

சாதாரண குறட்டைதான்; மூச்சுத்திணறல் போன்ற தொல்லைகள் இல்லை. ஆனால், உடனிருப்பவர்களுக்கு அது அசௌகர்யமாக இருக்கிறது என்று சொன்னால், குறட்டை வராமல் இருக்க அறுவை சிகிச்சை இருக்கிறது. அதேபோல் குறட்டைக்கும் உடல் பருமன், உடற்பயிற்சியின்மை போன்ற மற்ற காரணங்களையும் கூடுதலாகக் கவனித்து சரி செய்ய வேண்டும்.

உள்நாக்கு இருக்குமிடம் சிலருக்கு தொய்வாக இருக்கும். இதை அறுவை சிகிச்சையினால் சரி செய்யலாம். விபத்து போன்ற அசாதாரண காரணத்தாலோ அல்லது முக அமைப்பில் இருக்கும் எலும்புகளின் ஒழுங்கற்ற அமைப்பாலோ குறட்டை உண்டாகியிருந்தால் அதற்கேற்ற சிகிச்சையை மேற்கொள்ளலாம்.

மூக்கில் அலர்ஜி இருக்கிறது என்றால் அதற்கேற்ற சிகிச்சையை வழங்க வேண்டும். தைராய்டு சுரப்பு குறைவாக இருந்தால் அதற்கேற்ற மருந்துகளை எடுத்துக் கொள்ளும்போது குறட்டை நின்றுவிடும்.

குறட்டை 99.9 சதவிகிதம் முழுமையாகக் குணப்படுத்தக் கூடிய ஒரு பிரச்சினைதான். மிகவும் அரிதினும் அரிதான காரணங்கள் இருந்தால் குறட்டையை சரி செய்வதில் தடங்கல்கள் உருவாகலாம். அதையும் கண்டறிந்து சிகிச்சை அளிக்கும்பட்சத்தில் முழுமையாக குறட்டை குணமாக வாய்ப்பு உண்டு.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam