Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ஹெல்த் டிப்ஸ்: வறட்சியைத் தவிர்க்க. அருந்த வேண்டிய பானங்கள் இதோ..!

ஹெல்த் டிப்ஸ்: வறட்சியைத் தவிர்க்க. அருந்த வேண்டிய பானங்கள் இதோ..!

Minnambalam 2 years ago

கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், சூரியன் ஆரம்பத்திலேயே சுட்டெரிக்க ஆரம்பித்துவிட்டது. இந்த நிலையில் உடலை நீரேற்றத்துடன் வைத்திருப்பது என்பது மிகவும் முக்கியம்.

உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்வதற்கு தண்ணீர் மட்டுமின்றி, ஒரு சில ஆரோக்கியமான பானங்களும் உதவும். அவை உங்கள் உடலை கோடையில் நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவும்.

* எலுமிச்சை நீர் மிகவும் பிரபலமான மற்றும் பெரும்பாலானோர் விரும்பி பருகும் அற்புத பானம். அதற்கு ஒரு டம்ளர் நீரில் பாதி எலுமிச்சையைப் பிழிந்து, அத்துடன் ஒரு சிட்டிகை கல் உப்பு சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். இதனால் இது உடலை நீரேற்றத்துடன் வைத்திருப்பதோடு, ஒரு நாளைக்கு வேண்டிய வைட்டமின் சி சத்தும் உடலுக்கு கிடைக்கும்.

* உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள உதவும் மற்றொரு பானம் பால். இதை பெரும்பாலானோர் அறிந்திருக்க மாட்டார்கள். ஆனால் பால் உண்மையில் நீரிழப்பை எதிர்ப்பதற்கும் தண்ணீரை விட சிறந்தது. ஏனெனில் இதில் உடலில் திரவங்களைத் தக்க வைக்க உதவும் நல்ல தரமான கார்ப்ஸ், புரோட்டீன் மற்றும் சோடியம் போன்றவை உள்ளன. எனவே நீங்கள் பாலைப் பயன்படுத்தி பல்வேறு மில்க் ஷேக்குகள் மற்றும் ஸ்மூத்திகள் அல்லது தயிரைக் கொண்டு மோர் அல்லது லஸ்ஸியைத் தயாரித்துக் குடிக்கலாம்.

* இளநீர் உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள உதவும் சிறந்த பானம் என்பதில் சந்தேகம் எதுவும் இல்லை. இதில் கலோரிகள் குறைவு மற்றும் பொட்டாசியம் அதிகம் என்பதால், இது சாதாரண நீரை விட சிறந்த பானமாக கருதப்படுகிறது. மேலும் இது இயற்கையாகவே உடலுக்கு ஆற்றலை வழங்கும் என்பதால், இது எனர்ஜி பானங்களுக்கு சிறந்த மாற்று பானமும் கூட.

* வெள்ளரிக்காயில் 90% நீர்ச்சத்து உள்ளது மற்றும் இது காய்கறிகளிலேயே நீரேற்றமிக்க காயும் கூட. உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள பழச்சாறுகளை விட காய்கறி சாறுகள் சிறந்தவை. ஏனெனில் பழங்களில் உள்ள இயற்கை சர்க்கரை நீரேற்றத்தைத் தடுக்கும். அதோடு பழச்சாறுகள் சர்க்கரையின் செறிவான வடிவத்தைக் கொண்டிருக்கின்றன. இருப்பினும் நீங்கள் பழச்சாறுகளை விரும்பினால், ஆரஞ்சு சாறுகளை குடியுங்கள். ஏனெனில் இதில் எலக்ட்ரோலைட்டுகள் அதிகம் உள்ளது. பீட்ரூட் சாறு கூட நீரேற்றத்திற்கு சிறந்தது மற்றும் இது இயற்கையான இரத்த சுத்திகரிப்பு போல செயல்படுகிறது.

* செம்பருத்தி டீ, ரோஸ் டீ அல்லது சீமைச்சாமந்தி டீ போன்ற மூலிகை தேநீர் மிகவும் சிறந்த நீரேற்றும் பானங்கள். இவற்றில் காப்ஃபைன் எதுவும் இல்லை என்பதால், இது உடலை நீரேற்றத்துடன் வைத்திருப்பது மட்டுமின்றி, சோர்வடைந்த நரம்புகளை அமைதிப்படுத்தும் மற்றும் மனதை ரிலாக்ஸ் அடையச் செய்யும்.

* கற்றாழையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளால் நிரம்பியதோடு, சில சக்திவாய்ந்த மீளுருவாக்கம் பண்புகளையும் கொண்டுள்ளது. இது குடலில் உள்ள நச்சுக்களை நீக்க உதவுவதோடு, பொலிவான மற்றும் பளிச்சென்ற சருமத்தைப் பெறவும் செய்கிறது. அதற்கு சிறிது கற்றாழை ஜெல்லை நீரில் போட்டு கலந்து, வேண்டுமானால் சுவைக்கு எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து குடிக்கலாம்.

கிச்சன் கீர்த்தனா: முளைக்கீரை ஊத்தப்பம்

ராஜஸ்தான் அபார வெற்றி… ஆதிக்கம் செலுத்தும் சொந்த மண் அணிகள்!

'இதாங்க அமித் ஷாக்கு ஸ்கிரிப்ட்' : அப்டேட் குமாரு

டிஜிட்டல் திண்ணை: பாஜகவுக்கு 2 வது இடமா? ஸ்டாலின், எடப்பாடி ஷாக்!

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam