Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
இந்திய கம்யூனிஸ்ட் நாகை, திருப்பூர் வேட்பாளர்கள் அறிவிப்பு!

இந்திய கம்யூனிஸ்ட் நாகை, திருப்பூர் வேட்பாளர்கள் அறிவிப்பு!

Minnambalam 2 years ago

நாகை, திருப்பூர் தொகுதிகளுக்கான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் இன்று (மார்ச் 18) அறிவிக்கப்பட்டுள்ளனர்.

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு, கடந்த நாடாளுமன்ற தேர்தலைப் போல, இந்த முறையும் நாகப்பட்டினம், திருப்பூர் தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக கட்சியின் நிர்வாகக் குழு கூட்டம் சென்னை தியாராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகத்தில் மாநில செயலாளர் முத்தரசன் தலைமையில் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லக்கண்ணு, அகில இந்திய செயலாளர் நாராயணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நாராயணா, "நாகப்பட்டினம் தொகுதியில் திருவாரூர் மாவட்ட செயலாளர் வை.செல்வராஜ், திருப்பூர் தொகுதியில் தற்போதைய எம்.பி சுப்பராயன் ஆகியோர் போட்டியிட உள்ளனர்" என்று தெரிவித்தார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam