Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
இந்தியாவில் அறிமுகமாகிறது கூகுள் வாலட். கூகுள் பே நிலை என்ன?

இந்தியாவில் அறிமுகமாகிறது கூகுள் வாலட். கூகுள் பே நிலை என்ன?

Minnambalam 2 years ago

கூகுள் வாலட் ஆனது 2011 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டு 2018 ஆம் ஆண்டு கூகுள் பே ஆக மாற்றப்பட்டது. இப்போது மீண்டும் கூகுள் வாலட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

நம்மில் பலருக்கு இந்த சந்தேகம் வரலாம் கூகுள் வாலட் தான் கூகுள் பே ஆக மாற்றப்பட்டது, மீண்டும் கூகுள் வாலட் அறிமுகமாகி இருப்பதால் இனி கூகுள் பே இருக்காதா?, கூகுள் பேயின் நிலைமை என்ன என்று.

இந்த கூகுள் வாலட்டால் கூகுள் பே எந்த வகையிலும் பாதிக்கப்படாது. கூகுள் பே மற்றும் கூகுள் வாலட் ஆகிய இரண்டையும் வழங்க கூகுள் நிறுவனமானது முடிவெடுத்துள்ளது.

கூகுள் பேவில் இல்லாத சில சேவைகளும் கூகுள் வாலட்டில் கிடைக்கும். அந்தவகையில் கூகுள் வாலட்டில் என்னென்ன சேவைகள் உள்ளது என்பதை பார்க்கலாம்.

கூகுள் பேவை போலவே கூகுள் வாலட்டை பயன்படுத்தியும் வாங்கிய பொருட்களுக்கு பணம் செலுத்த முடியும்.

என்எப்சி-எனேபிள்டு டெர்மினல்களில் ஸ்மார்ட் போனை பயன்படுத்தி டேப் அண்டு பே செய்யலாம் மற்றும் நண்பர்களுக்கும் பணம் அனுப்ப முடியும். இந்த ஆப் மூலமாக நமது பாஸ்வேர்ட் மற்றும் பின்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள முடியும்.

திருடு போன அல்லது தொலைந்த போன்களில் உள்ள சேவைகளை தூரத்தில் இருந்தே முடக்க முடியும். கூகுள் வாலட்டைப் பயன்டுத்தி கிரெடிட், டெபிட் மற்றும் கிப்ட் கார்டுகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள முடியும்.

மற்றவர்களிடமிருந்து நேரடியாக கூகுள் வாலட் அக்கவுண்டிற்கு நாம் பணத்தை பெற்றுக் கொள்ளலாம்.

கூகுள் வாலட் மூலம் பணத்தை ஏற்கும் கடைகள், ஆப்கள், இணையதளங்களில் ஆன்லைன் வழியாக பணத்தை செலுத்திக் கொள்ளலாம்.

அடுத்தடுத்து பணம் செலுத்தும்போது கட்டண விவரங்களை உள்ளிட வேண்டிய அவசியம் இல்லை.

இந்த ஆப்பை பயன்படுத்தி பணம் அனுப்ப இமெயில் ஐடி அல்லது மொபைல் நம்பர் இருந்தாலே போதும். கூகுள் வாலட் ஆப்பை ப்ளே ஸ்டோரில் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

கூகுள் பேவில் உள்ள அத்தனை அம்சங்களும் இதில் உள்ளதால் பின்வரும் காலங்களில் கூகுள் பே காணாமல் போகுமா? என்ற சந்தேகம் நம்மில் பலருக்கு ஏற்படலாம், அதற்கான விடை இனிவரும் காலங்களில் தான் தெரியும்.

-பவித்ரா பலராமன்

தமிழுக்கு வரும் 'குண்டூர் காரம்' ஹீரோயின்… ஹீரோ யாருன்னு பாருங்க!

'புஷ்பா 2' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி இதுதான்?

#13YearsOfKO: சிம்புவின் காஸ்ட்லி மிஸ்… 'என்னமோ ஏதோ'ன்னு 13 வருஷம் ஓடிப்போச்சு!

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam