Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
IPL 2024 : ஆன்லைனில் மட்டுமே. CSKvsRCB போட்டி டிக்கெட் பெறுவது எப்படி?

IPL 2024 : ஆன்லைனில் மட்டுமே. CSKvsRCB போட்டி டிக்கெட் பெறுவது எப்படி?

Minnambalam 2 years ago

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஐ.பி.எல். தொடரின் 17வது சீசன் வரும் 22-ம் தேதி தொடங்க உள்ளது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன.

இந்த போட்டியை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், அதற்கான டிக்கெட் விற்பனை ஆன்லைனில் இன்று (மார்ச் 18) காலை 9:30 மணிக்கு தொடங்குகிறது.

போட்டிக்கான டிக்கெட்டுகளை Paytm செயலி மற்றும் insider.in இணையதளம் மூலம் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்தபட்ச டிக்கெட் விலை 700 ரூபாயாகவும் அதிகபட்ச டிக்கெட் விலை 7,500 ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

கடந்த முறை I J K ஸ்டன்ட்களுக்கான கட்டணம் 2 ஆயிரம் ரூபாயாக இருந்த நிலையில், தற்போது, 4 ஆயிரம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று C, D, E லோயர் இருக்கைகளுக்கான கட்டணம் 200 ரூபாய் உயர்த்தப்பட்டு ஆயிரத்து 700 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தாண்டு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை முழுவதுமாக ஆன்லைன் மூலம் மட்டுமே நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

கிறிஸ்டோபர் ஜெமா

பொன்முடிக்கு மீண்டும் அமைச்சர் பதவி : ஆளுநர் ரவி மறுப்பு?

பியூட்டி டிப்ஸ்: உங்கள் உடல்வாகுக்கு ஏற்ற உடைகள் இதோ…

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam