மீண்டும் ஒரு மேட்சில் வெற்றி பெற்று சென்னை அணி பார்முக்குத் திரும்பியுள்ளது. டெல்லி அணிக்கு எதிராக தோல்வியைத் தழுவிய சென்னை அணி, நம்பர் 1 அணியாக இருக்கும் கொல்கத்தாவை அடித்து வெற்றி பெற்றது அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது.
மறுபுறம் பஞ்சாப் அணியின் சேஸிங் பிரம்மிக்க வைப்பதாக உள்ளது. அந்த அணி ஓபனிங் பேட்ஸ்மேன்கள் நிலைத்து நின்று ஆடினால், கண்டிப்பாக பிளே ஆப் செல்ல வாய்ப்புகள் இருக்கின்றன.
இவை எல்லாவற்றையும் விட லக்னோ அணியின் பவுலர்கள் பயங்கரமாக மிரட்டுகின்றனர். 160+ ரன்கள் அடித்த அந்த அணி பவுலர்கள் தயவால் மீண்டும் ஒரு வெற்றியை சுவைத்துள்ளது. ஐபிஎல் தொடரில் எல்லாம் மாறினாலும் கூட, பெங்களூரு அணி தோல்வி அடைவது இன்னும் மாறவில்லை.
ராஜஸ்தான் அணிக்கு எதிராக அந்த அணி 3-வது தோல்வியைத் தழுவ, ஸ்விக்கி நிறுவனமே மீம்ஸ் போட்டு பெங்களூரு அணியைக் கிண்டலடித்து இருக்கிறது.
அந்த அணியின் தொடர் தோல்வியால் இதற்கான காரணம் என்னவென்று சமூக வலைதளங்களில் கருத்துக்கணிப்பு நடத்த, 2008-ல் அந்த அணி ஐபிஎல் தொடரில் பதிவு செய்ததே தப்பு தான் என கிரிக்கெட் ரசிகர்கள் கண்டபடி கலாய்த்து வருகின்றனர்.
அந்த வகையில் நடப்பு ஐபிஎல் தொடர்பான மீம்ஸ்களை இங்கே பார்க்கலாம்.

