நேற்று (ஏப்ரல் 2) நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின.
பெங்களூரு அணியின் சொந்த மைதானமான சின்னச்சாமியில் நடைபெற்ற இப்போட்டியில் ஆர்சிபி அணி மீண்டும் ஒரு தோல்வியைத் தழுவியது.
இதுவரை நடைபெற்ற நான்கு போட்டிகளில் மூன்றில் பெங்களூரு அணி தோல்வியை சந்தித்து இருக்கிறது. இதனால் அந்த அணியின் ரசிகர்கள் தற்போது கால்குலேட்டரும் கையுமாக இருக்கின்றனர்.
மறுபுறம் பெங்களூரு அணியின் இந்த தோல்வியால், மனம் உடைந்த ரசிகர்கள் சொந்த அணி என்றும் பாராமல் மற்ற அணிகளின் ரசிகர்களுடன் சேர்ந்து ஆர்சிபியை கிண்டலடித்து வருகின்றனர்.
இதன் காரணமாக சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் நிரம்பி வழிகின்றன. அதில் இருந்து ஒருசில மீம்ஸ்களை நாம் இங்கே பார்க்கலாம்.

