Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
IPL 2024 : வீறுநடை போட்ட லக்னோ. சொந்த மைதானத்தில் வீழ்த்திய டெல்லி!

IPL 2024 : வீறுநடை போட்ட லக்னோ. சொந்த மைதானத்தில் வீழ்த்திய டெல்லி!

Minnambalam 2 years ago

DCvsLSG : சொந்த மைதானத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியிடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி.

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று (ஏப்ரல் 12) நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி அணியும் மோதின.

இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

குல்தீப் - கலீல் அபாரம்!

வந்த வேகத்திலேயே தொடக்க வீரர்கள் குயின்டன் டி காக் - கே.எல்.ராகுல் இருவரும் பவுண்டரியுடன் அதிரடியாக ஆட்டத்தை துவங்கினர். எனினும் 3-வது ஓவரை வீசிய கலீல் அகமது பந்தில் 4 பவுண்டரி அடித்த குயின்டன் டி காக் 19 ரன்களில் ஆட்டமிழந்தார்.

கலீல் வீசிய அடுத்த ஓவரில் களமிறங்கிய தேவ்தத் படிக்கலும் 3 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார்.

அவர்களைத் தொடர்ந்து களத்துக்கு வந்த மார்கஸ் ஸ்டாயினிஸையும் (8) மற்றும் நிக்கோலஸ் பூரனையும்(0) தனது ஒரே ஓவரில் ஆட்டமிழக்க செய்தார் குல்தீப் யாதவ்.

இதற்கிடையே மறுபுறம் அணியை மீட்கும் முயற்சியில் போராடிய கேப்டன் கே.எல்.ராகுலும் 39 ரன்களில் அவுட்டாக, லக்னோ அணி நெருக்கடிக்கு உள்ளானது.

தொடர்ந்து களமிறங்கிய தீபக் ஹுடா(10) மற்றும் குருணால் பாண்டியா(3) இருவரும் அடுத்தடுத்த ஓவர்களில் வெளியேற 94 - 7 விக்கெட்டுகள் இழந்தது தத்தளித்தது.

எனினும் 8வது விக்கெட்டுக்கு இணைந்த ஆயுஷ் பதோனி - அர்ஷ்த் கான் ஜோடி இருவரும் பொறுமையாக விளையாடினர்.

5 பவுண்டரி விரட்டிய பதோனி அரைசதம் அடிக்க, இந்த ஜோடி 8வது விக்கெட்டுக்கு 63 ரன்கள் சேர்த்தனர்.

இதனால் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 167 ரன்களை எட்டியது லக்னோ அணி.

டெல்லி அணி தரப்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளும், கலீல் அகமது 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

அதிரடி பேட்டிங் செய்த டெல்லி!

168 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியில் தொடக்க வீரரான வார்னர் 8 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார்.

எனினும் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய பிரித்வி ஷா(32), ஜேக் ஃப்ரேசர் மெக்குர்க்(55) மற்றும் கேப்டன் ரிஷப் பண்ட்(41) ஆகியோர் அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.

19வது ஓவரின் முதல் பந்தை எதிர்கொண்ட டிரிஸ்டன் ஸ்டப்ஸ் சிக்ஸர் அடிக்க, 170 ரன்கள் குவித்த டெல்லி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

டெல்லி அணியில் 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகள் எடுத்த குல்தீப் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

கடந்த 3 ஆட்டங்களாக தோல்வியே சந்திக்காமல் வீறுநடை போட்ட லக்னோ சொந்த மைதானத்தில் நடந்த இன்றைய சோகமான தோல்வியை தழுவியது.

கிறிஸ்டோபர் ஜெமா

அமித் ஷாவும்… அடுத்த தேர்தலும்… : அப்டேட் குமாரு

"உணவை வைத்து அரசியல் பேசுவது காட்டுமிராண்டித்தனம்" : மோடி பேச்சுக்கு எதிர்ப்பு!

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam