Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ஜெயிலர் 2 முதல் வார வசூல் எவ்வளவு?: சன் பிக்சர்ஸ் அப்டேட்!

ஜெயிலர் 2 முதல் வார வசூல் எவ்வளவு?: சன் பிக்சர்ஸ் அப்டேட்!

Minnambalam 10 hrs ago

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் 2 திரைப்படம் 549 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், அனிருத் இசையில் சன் பிக்சர்ஸ் தயாரித்த படம் ஜெயிலர் 2.

ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு கடந்த அக்டோபர் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

படம் வெளியாகி ஒரு வாரம் கடந்திருக்கும் நிலையில் உலக அளவில் மொத்தமாக 549 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழ் சினிமா வரலாற்றில் முதல் வாரத்தில் அதிக வசூல் செய்த படம் என குறிப்பிட்டு தயாரிப்பு நிறுவனம் ஜெயிலர் 2 திரைப்படத்தின் ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டுள்ளது.

தற்போதைய நிலவரப்படி, திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் இப்படம் இன்னும் பல சாதனைகளை முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெயிலர் படத்தின் முதல் பாகம் ஒட்டுமொத்தமாக ரூ.605 கோடி வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam