Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் உடல் நல்லடக்கம்!

காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் உடல் நல்லடக்கம்!

Minnambalam 2 years ago

ரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட ஜெயக்குமார் தனசிங் உடல் இன்று (மே 5) நல்லடக்கம் செய்யப்பட்டது.

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் மே 2 ஆம் தேதி காணாமல் போனதாக உவரி காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, மாயமான ஜெயக்குமார் தனசிங் உவரி அருகே கரைசுத்துபுதூரில் உள்ள அவரது தோட்டத்தில் எரிந்த நிலையில் நேற்று சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

அவர் எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டது தொடர்பாக 7 தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொள்ளப்படுகிறது என நெல்லை எஸ்.பி. சிலம்பரசன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஜெயக்குமார் தனசிங்கின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் இன்று காலை அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

அவரது உடலுக்கு தமிழக சபாநாயகர் அப்பாவு, காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, கன்னியாகுமரி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் உள்பட பல அரசியல் நிர்வாகிகள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து, நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரான ஜெயக்குமார் தனசிங்கின் உடல் இன்று கரைசுத்துபுதூர் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்து

TOXIC : யாஷுடன் நடிக்கும் நயன்தாரா?

சென்னையில் இங்குதான் அதிகபட்ச வெப்பம் - வெதர்மேன் ஹாட் ரிப்போர்ட்!

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam