Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Kanguva Teaser: 'வெறித்தனம்' காட்டும் சூர்யா. 'சும்மா தெறிக்குது' கொண்டாடும் ரசிகர்கள்!

Kanguva Teaser: 'வெறித்தனம்' காட்டும் சூர்யா. 'சும்மா தெறிக்குது' கொண்டாடும் ரசிகர்கள்!

Minnambalam 2 years ago

சிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த 'கங்குவா' படத்தின் டீசர் தற்போது வெளியாகி இருக்கிறது.

படத்தின் டப்பிங் மற்றும் விஎப்எக்ஸ் உள்ளிட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் சென்னையில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. படம் எதிர்பார்த்ததை விடவும் நன்றாக வந்திருப்பதால் இரண்டாவது பாகத்தினையும் எடுக்க முடிவு செய்து அதற்காக படக்குழு மூன்று நாட்கள் ஷூட்டிங்கும் நடத்தியுள்ளது.

இந்தநிலையில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த 'கங்குவா' படத்தின் டீசர் தற்போது வெளியாகியிருக்கிறது. இந்த டீசரைப் பார்த்த ரசிகர்கள் கொண்டாடிக்கொளுத்தி வருகின்றனர்.

குறிப்பாக 'பெருமாச்சி' என சூர்யா கத்தும்போது பார்க்கும் நமக்குமே மெய் சிலிர்த்துப் போகிறது. டீசர் எதிர்பார்த்ததை விடவும் சிறப்பாக வந்திருப்பதால், "உண்மையிலேயே டீசர் தீயாக இருக்கிறது", "சிவாவிடம் இருந்து நிச்சயமாக இப்படி ஒரு வெறித்தன டீசரை எதிர்பார்க்கவில்லை", என ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

ரசிகர்களின் இந்த பாராட்டு மழையால் சமூக வலைதளங்களில் #KanguvaSizzle என்னும் ஹேஷ்டேக் இந்தியளவில் தற்போது ட்ரெண்டாகி வருகிறது.

-மஞ்சுளா

ஜாபர் சாதிக்கிற்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்!

சிஏஏ சட்டம்: மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

அண்ணாமலைக்கு எதிராக போட்டியா? பெண் தொழிலதிபர் விளக்கம்!

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam