Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
கெஜ்ரிவால் கைது: உச்சநீதிமன்றத்தில் ஆம் ஆத்மி அவசர வழக்கு!

கெஜ்ரிவால் கைது: உச்சநீதிமன்றத்தில் ஆம் ஆத்மி அவசர வழக்கு!

Minnambalam 2 years ago

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் இன்று (மார்ச் 21) அவசர வழக்கு தொடரப்பட்டுள்ளது.

புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை இன்று இரவு கைது செய்தனர்.

இதுகுறித்து டெல்லி அமைச்சரும் ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவருமான அதிஷி செய்தியாளர்களிடம் பேசியபோது, "அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. சிறையில் இருந்து கெஜ்ரிவால் அரசை நடத்துவார். தொடர்ந்து டெல்லி முதல்வராக அவர் நீடிப்பார்.

கைது நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம். எங்கள் வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்றத்திற்கு விரைந்துள்ளனர். இன்று இரவு அவசர வழக்காக விசாரிக்க முறையீடு செய்துள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam