Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
கிச்சன் கீர்த்தனா: பச்சை மிளகாய் மோர் வற்றல்

கிச்சன் கீர்த்தனா: பச்சை மிளகாய் மோர் வற்றல்

Minnambalam 2 years ago

கோடை தொடங்கிவிட்டது. வத்தல், வடகம் போன்றவற்றை செய்து அசத்துபவர்கள் ஒருபுறம் இருக்க… அதற்கிடையில் இந்த பச்சை மிளகாய் மோர் வற்றலையும் செய்து வைத்துக்கொண்டு சூடான எண்ணெயில் போட்டு வறுத்து எடுத்து தயிர் சாதத்துக்குத் தொட்டுச் சாப்பிடலாம்.

என்ன தேவை?

பச்சை மிளகாய் (நீளமானது அல்லது குண்டு மிளகாய்) - கால் கிலோ
கெட்டித் தயிர் - 2 கப்
கல் உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - தயாரான மிளகாய் பொரிப்பதற்கு தேவையான அளவு

எப்படிச் செய்வது?

பச்சை மிளகாய்களை எடுத்துக்கொண்டு ஒவ்வொன்றிலும் ஊசியால் இரண்டு மூன்று துளை போடவும். (இப்படிச் செய்வதால் இதில் உப்பும் தயிரும் உள்ளே போய் சுவை அதிகமாகும்). ஒரு பாத்திரத்தில் கல் உப்பு போட்டு பச்சை மிளகாயை அதில் போட்டு குலுக்கவும். ஒரு நாள் முழுவதும் இதை மூடி போட்டு ஊறவைக்கவும். மிளகாயில் உப்பு நன்கு இறங்கி இருக்கும். பிறகு அதில் தயிர் ஊற்றி நன்கு குலுக்கவும். எல்லா மிளகாயிலும் தயிர் பரவி இருக்க வேண்டும். இதை ஒரு தாம்பாளத்துக்கு மாற்றி பரப்பிவிட்டு மூன்று நாள்கள் காயவிடவும். இப்போது சுவையான மோர் மிளகாய் வற்றல் தயார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam