பருவநிலை மாற்றத்துக்கேற்ப ஊட்டச்சத்து கொண்ட உணவுகள் மிக அவசியம். அந்த வகையில் ஊட்டச்சத்துகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்களால் நிரம்பிய இந்த மல்ட்டி ஃப்ரூட் சாலட்டை செய்து சுவைக்கலாம்.
இது குழந்தைகள் விரும்பும் சாலட்டாகவும் இருக்கும்.
என்ன தேவை?
ஆப்பிள் - ஒன்று
அன்னாசிப்பழம் - 2 ஸ்லைஸ்
ஆரஞ்சு சுளைகள் - 4
சின்ன மாம்பழம் - ஒன்று
கறுப்பு அல்லது பச்சை திராட்சை - அரை கப்
சர்க்கரை - தேவைக்கேற்ப
வெனிலா ஐஸ்க்ரீம் - ஒரு கப்
டூட்டி ஃப்ரூட்டி - சிறிதளவு
எப்படிச் செய்வது?
பழங்களை நன்கு கழுவி சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். சர்க்கரையை லேசாக பாகு காய்ச்சவும். அகலமான பவுலில் நறுக்கிய பழங்களை நிரப்பி, மேலே சர்க்கரைப்பாகை ஊற்றவும். அதன்மேல் வெனிலா ஐஸ்க்ரீமை பரப்பி, டூட்டி ஃப்ரூட்டியைத் தூவிப் பரிமாறவும்.

