கோடையில் ஏற்படும் உடல் வறட்சியை நீக்கி, சிறுநீரகத்தைச் சீராகச் செயல்படுத்த வைக்கும் தன்மை மாதுளை முத்துகளுக்கு உண்டு.
இந்த முத்துகளுடன் கெட்டியான தயிர் சேர்த்து செய்யப்படும் இந்த ராய்த்தா, கோடைக்கேற்ற சிறந்த சைடிஷாக அமையும்.
என்ன தேவை?
மாதுளை முத்துகள் - ஒரு கப்
கெட்டித் தயிர் - ஒன்றரை கப்
பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் - தலா ஒன்று (நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கவும்)
உப்பு - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு மூன்றையும் சேர்த்துப் பிசிறவும். இதில் கெட்டித் தயிரைக் கலக்கவும். பரிமாறும் சமயம் மாதுளை முத்துகளைக் கலந்து பரிமாறவும்.

