கோடையில் ஏற்படும் உடல் சூட்டை தணிக்கும் சின்ன வெங்காயத்தைப் பயன்படுத்தி இந்தக் குழம்பு செய்யலாம். அனைவருக்கும் ஏற்ற இந்த குழம்பு, வாய்ப்புண், கண் வலி போன்றவற்றை விரைவில் குணமாக்கும் வல்லமை கொண்டது.
என்ன தேவை?
பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - ஒரு கப்
மிளகாய்த்தூள் - காரத்துக்கேற்ப
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
பொடித்த வெல்லம் - அரை டேபிள்ஸ்பூன்
கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை - சிறிதளவு
புளிக்கரைசல், நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு
எப்படிச் சமைப்பது?
வாணலியில் நல்லெண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து, பிறகு சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். அதனுடன் புளிக்கரைசல், மஞ்சள்தூள், உப்பு, மிளகாய்த்தூள், வெல்லம் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு இறக்கவும்.

