காலை வேளையில் எப்போதும் காபி, டீ குடிப்பவர்கள், கோடை வெப்பத்தைத் தணிக்க இந்த வாழைத்தண்டு மோர் செய்து குடியுங்கள்.
இது உடலுக்கு குளிர்ச்சியைத் தருவதோடு உடல் எடையைக் குறைக்கவும் உதவும். மேலும், உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றும். அனைவருக்கும் ஏற்ற ஆரோக்கிய பானமாக அமையும்.
என்ன தேவை?
வாழைத்தண்டு - ஒன்று (நறுக்கவும்)
கட்டித் தயிர் - ஒரு கப்
தண்ணீர் - அரை டம்ளர்
கறிவேப்பிலை - சிறிதளவு
இஞ்சி - சிறிய துண்டு
உப்பு - தேவைக்கேற்ப
எப்படிச் செய்வது?
நறுக்கிய வாழைத்தண்டு, கட்டித்தயிர், கறிவேப்பிலை, இஞ்சி ஆகியவற்றை சேர்த்து தேவையான அளவுக்குத் தண்ணீர் ஊற்றி அரைத்துக்கொள்ளவும். பிறகு இதை வடிகட்டி உப்பு சேர்த்தால் வாழைத்தண்டு மோர் தயார்.

