Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
மக்களவை தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவில் உதயநிதி ஸ்டாலின்

மக்களவை தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவில் உதயநிதி ஸ்டாலின்

Minnambalam 2 years ago

ரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக சார்பில் தேர்தல் பணிகள் ஒருங்கிணைப்பு குழு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு மற்றும் கூட்டணி கட்சிகள் தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தை குழு என 3 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில், நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான கழகப் பணிகளை ஒருங்கிணைக்கவும் மேற்பார்வையிடவும் 5 பேர் அடங்கிய குழுவை முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று (ஜனவரி 19) அறிவித்துள்ளார்.

அதன் விவரம்:

கே.என்.நேரு

ஆர்.எஸ்.பாரதி

எ.வ.வேலு

தங்கம் தென்னரசு

உதயநிதி ஸ்டாலின்

இந்த குழுவில் அமைச்சர் பதவியில் அல்லாத கட்சியின் மூத்த தலைவரும், அமைப்புச் செயலாளருமான ஆர்.எஸ்.பாரதி இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam