Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
மனைவி ஷாலினி தயாரிப்பில் நடிக்கும் அஜித்

மனைவி ஷாலினி தயாரிப்பில் நடிக்கும் அஜித்

Minnambalam 2 weeks ago

டிகர் அஜித்குமாரின் புதிய பட அறிவிப்பு இன்று (ஆகஸ்ட் 3) வெளியாகியுள்ளது.

நடிகர் அஜித்குமார் நடிப்பில் 2025 ஏப்ரல் மாதம் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகி இருந்தது.

இதைத்தொடர்ந்து அவர் கார் ரேசில் கவனம் செலுத்தி வந்தார். இதனால் அஜித்குமாரின் 64வது படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே தொடர்ந்து இருந்து வந்தது.

இந்த சூழலில் சில தினங்களுக்கு முன்பு, செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், அஜித்தின் 64வது படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிவித்திருந்தார்.

அதன்படி அஜித்தின் 64வது படம் குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளியாகி உள்ளது.

அஜித்தின் புதிய படத்துக்கு டேர் டெவில் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. வெள்ளை நிற பகடைகளில் சிவப்பு நிறத்தில் படத்தின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.ஆதிக் ரவிச்சந்திரன் இந்த படத்தை இயக்குகிறார்.

இந்தப் படத்தின் மூலம் அஜித்தின் மனைவி ஷாலினி தயாரிப்பாளராக அறிமுகமாகியுள்ளார். இந்த தயாரிப்பு நிறுவனத்துக்கு ப்ரேவ் ஹார்ட்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. குதிரையில் வீரன் பயணிப்பது போன்ற தங்க நிற லோகோ வடிவமைக்கப்பட்டுள்ளது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு அஜித் படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளதால் ரசிகர்கள் இந்த போஸ்டரை வைரலாக்கி வருகின்றனர்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam