Dailyhunt
மாநிலங்களவைக்குத் தேர்வான தமிழக எம்.பி.க்கள் பதவியேற்பு.. 'சம்பவம்' செய்த எல்.எகே.சுதீஷ்

மாநிலங்களவைக்குத் தேர்வான தமிழக எம்.பி.க்கள் பதவியேற்பு.. 'சம்பவம்' செய்த எல்.எகே.சுதீஷ்

Minnambalam 3 weeks ago

மிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட புதிய எம்பிக்கள் 6 பேரும் இன்று (ஏப்ரல் 6) தமிழில் பதவி ஏற்றுக் கொண்டனர்.

அந்த வகையில் திமுக சார்பில் தேர்வு செய்யப்பட்ட திருச்சி சிவா மீண்டும் இன்று மாநிலங்களவை உறுப்பினராக பதவி ஏற்றுக்கொண்டார். திமுகவை சேர்ந்த கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றார்.

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட கிறிஸ்டோபர் திலக் பதவியேற்றுக்கொண்டார். தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ்ம் இன்று மாநிலங்களவை உறுப்பினராக பதவி ஏற்றுக்கொண்டார்.

இதேபோல் அதிமுக சார்பில் மு. தம்பிதுரை மீண்டும் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக இன்று பதவி ஏற்றுக்கொண்டார். அதிமுக கூட்டணி கட்சியில் இடம் பெற்றுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று மாநிலங்களவை உறுப்பினராக பதவி ஏற்றுக்கொண்டார். புதிதாக பதவியேற்று கொண்ட தமிழக எம்பிக்களுக்கு மாநிலங்களவை தலைவர் சி பி ராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்துள்ளார்

நாடாளுமன்றத்தில் விஜயகாந்த்

மாநிலங்களவை தலைவர் சிபி ராதாகிருஷ்ணனின் அனுமதியுடன் மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றுக் கொண்ட எல்.கே. சுதீஷ் அவையின் முன்பாக தனது சட்டை பாக்கெட்டில் இருந்த விஜயகாந்தின் புகைப்படத்தை உயர்த்தி காட்டினார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam