Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
மறைந்தாலும் மறக்க முடியாத உமா ரமணன் பாடல்கள்!

மறைந்தாலும் மறக்க முடியாத உமா ரமணன் பாடல்கள்!

Minnambalam 2 years ago

நிழல்கள் படத்தில் பூங்கதவே தாழ் திறவாய் பாடல் மூலம் பின்னணி பாடகியாக அறிமுகமானவர் உமா ரமணன். உடல்நல குறைவு காரணமாக நேற்று (மே 1) இரவு 9.30 மணியளவில் சென்னை அடையாறில் உள்ள அவரது வீட்டில் காலமானார்.

நிழல்கள் படத்தில் 'பூங்கதவே தாழ் திறவாய்' பாடல் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் உமா ரமணன்.

இளையராஜா இசையில் சுமார் 1000 பாடல்கள் வரை உமா ரமணன் பாடியுள்ளார். எம்.எஸ்.விஸ்வநாதன், வித்யாசாகர் ஆகியோரது இடையிலும் பாடல்கள் பாடியுள்ளார். சினிமா தவிர்த்து கணவர் ஏ.வி. ரமணன் உடன் இணைந்து 6000 க்கும் மேற்பட்டமேடை கச்சேரிகளிலும் பாடியுள்ளார். நிறைய படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார்.

அவரது இறுதிச்சடங்கு இன்று மாலை நடைபெறுகிறது. உமா ரமணனின் மறைவுக்கு இசை ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

உமா ரமணன் குரலில் காலம் கடந்தும் மனதில் பதிந்து நிற்கும் பாடல்கள் சில

1. பூங்கதவே தாழ் திறவாய்… - நிழல்கள்

2. கஸ்தூரி மானே… - புதுமைப் பெண்

3. பொன் மானே கோபம் ஏனோ- ஒரு கைதியின் டைரி

4. ராக்கோழி கூவையில… ஒரு தாயின் சபதம்

5. ஏலேலம் குயிலே… - பாண்டி நாட்டு தங்கம்

6. வெள்ளி நிலவே வெள்ளி நிலவே… - நந்தவன தேரு

7. கண்ணும் கண்ணும் தான்- திருப்பாச்சி

இராமனுஜம்

விருதுநகர் வெடி விபத்து.. நடந்தது என்ன? : விஏஓ அதிர்ச்சி தகவல்!

நயினார் நாகேந்திரனின் உறவினர் உட்பட 2 பேர் சிபிசிஐடி முன் ஆஜர்!

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam