Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
"மாற்றுத்திறனாளிகள் மீதான பார்வையை ஸ்ரீகாந்த் மாற்றும்" : ஜோதிகா நம்பிக்கை!

"மாற்றுத்திறனாளிகள் மீதான பார்வையை ஸ்ரீகாந்த் மாற்றும்" : ஜோதிகா நம்பிக்கை!

Minnambalam 2 years ago

பார்வை திறன் குறைபாடு இருந்தும் தொழிலதிபராக சாதித்த ஸ்ரீகாந்த் பொல்லா என்பவரின் சுயசரிதையை தழுவி தயாராகி இருக்கும் திரைப்படம் ஸ்ரீகாந்த்.

இப்படத்தை துஷார் ஹிர நந்தானி இயக்கியுள்ளார்.

இதில் இந்தி நடிகர் ராஜ்குமார் ராவ், ஜோதிகா, ஆலயா எஃப், சரத் கெல்கர், ஜமீல் கான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பிரதம் மேத்தா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆனந்த் மிலிந்த், தனிஷ் பக்ஷி, சாஸெட் -பரம்பரா மற்றும் வேத் சர்மா ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள்.‌

டி சீரிஸ் மற்றும் சாக் இன் சீஸ் பிலிம் புரொடக்ஷன் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இப்படம் வரும் 10ஆம் தேதி வெளியாக இருப்பதையொட்டி நேற்று (மே 3) சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தது படக்குழு.

இந்நிகழ்வில் நடிகை ஜோதிகா பேசுகையில், "ஸ்ரீகாந்த் திரைப்படம் என்னை மிகவும் பாதித்த கதை இந்தத் திரைப்படத்தில் நானும் நடித்ததற்காக பெருமிதம் கொள்கிறேன். என்னுடைய திரையுலகப் பயணத்தில் இந்த திரைப்படம் மிகவும் முக்கியமானது. ஸ்ரீகாந்த் பொல்லாவின் கதை கேட்டதும் எனக்கு வியப்பு ஏற்பட்டது. அவரை நேரில் சந்தித்து பேசியதும், அவரது வாழ்வில் நடைபெற்ற சம்பவங்களை கேட்ட பிறகு வாழ்க்கை பற்றிய எனது பார்வை முற்றாக மாறிவிட்டது.

அதிலும் குறிப்பாக பார்வைத்திறன் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளிகள் என்னுடைய பார்வை மாறிவிட்டது. அவர்கள் எவ்வளவு திறமை வாய்ந்தவர்கள் என்பதையும், பொதுவெளியில் அவர்களை எப்படி நாம் நடத்துகிறோம் என்பது குறித்தும் பல வினாக்களை என்னுள் எழுப்பியது.

இந்தத் திரைப்படம் பலருக்கும் அவர்களது அகக்கண்களை திறந்து விடும் படைப்பாக இருக்கும். இந்தப் படம் வெளியான பிறகு பார்வைத்திறன் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளிகளை பற்றி நாம் கொண்டிருக்கும் பார்வையில் நிச்சயம் மாற்றம் ஏற்படும்.

இந்த திரைப்படத்தில் நான் ஆசிரியை வேடத்தில் நடித்திருக்கிறேன். ' காக்க காக்க", 'ராட்சசி' அதன் பிறகு 'ஸ்ரீகாந்த்' படத்தில் மூன்றாவது முறையாக ஆசிரியையாக நடித்திருக்கிறேன்.

இந்தி திரையுலகில் நான் நடிக்கும் மூன்றாவது இந்தி திரைப்படம் இது. இந்தப் படத்தில் பணியாற்றிய அனுபவம் இனிமையானது. அற்புதமானது. பணியாற்றுவதற்கு மொழிகள் தடையில்லை. மலையாள திரையுலகமாக இருந்தாலும்.. தமிழ் திரையுலகமாக இருந்தாலும்.. இந்தி திரையுலகமாக இருந்தாலும்.. திறமையான கலைஞர்களுடன் தான் பணியாற்றியிருக்கிறேன்" என்றார்.

- இராமானுஜம்

Gold Rate: 2வது நாளாக குறையும் தங்கம் விலை!

சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam