Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
மதுபான கொள்கை முறைகேடு வழக்கு : கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்!

மதுபான கொள்கை முறைகேடு வழக்கு : கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்!

Minnambalam 2 years ago

துபான கொள்கை முறைகேடு வழக்கில், டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் இன்று (மார்ச் 16) ஆஜரான அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லியில் மதுபான கொள்கையை வகுத்து அமல்படுத்தியதில் ஊழல் நடைபெற்றதாக பாஜக குற்றச்சாட்டை சுமத்தியது. இதனை விசாரித்த அமலாக்கத்துறை அதிகாரிகள் டெல்லி முன்னாள் துணை முதல்வரும், கலால்துறை அமைச்சருமான மணிஷ் சிசோடியா மற்றும் ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் ஆகியோரை கைது செய்தனர்.

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தொடர்பு இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து, அமலாக்கத்துறையினர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது வழக்குப் பதிவு செய்து, அவருக்கு எட்டு முறை சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால், சம்மனை ஏற்று கெஜ்ரிவால் ஆஜராகாமல் புறக்கணித்து வந்தார்.

இதனிடையே, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இன்று (மார்ச் 16) நேரில் ஆஜராக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது. இந்த சம்மனை ஏற்று அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்றத்தில் ஆஜரானார். இதனைத் தொடர்ந்து, அவருக்கு ஜாமீன் வழங்கி டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam