நாடாளுமன்ற தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நாகப்பட்டினம், திருப்பூர் தொகுதிகளில் போட்டியிடுவதென இன்று (மார்ச் 12) உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
திமுக கூட்டணியில் விசிக சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகளிலும், கொமதேக நாமக்கல், ஐயூஎம்எல் ராமநாதபுரம் தொகுதிகளில் போட்டியிடும் என்று தொகுதி ஒப்பந்தம் கையெழுத்தான போதே அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில், காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவதென பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தது.

இந்தநிலையில் சிபிஎம் கட்சிக்கு மதுரை, திண்டுக்கல் தொகுதிகளில் போட்டியிட இன்று உடன்பாடு ஏற்பட்டுள்ளது. அதேபோல, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட நாகப்பட்டினம், திருப்பூர் தொகுதிகளில் சிபிஐ மீண்டும் போட்டியிடுவதென தீர்மானிக்கப்பட்டு திமுக தலைவர் ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் இடையே இன்று ஒப்பந்தம் கையெழுத்தானது.

