17-வது தமிழக சட்டசபை தேர்தல் எனும் மிகப் பெரிய ஜனநாயக திருவிழாவில் நமது மின்னம்பலம் மீடியாவும் இணைந்துள்ளது.
2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது மின்னம்பலம் மீடியா மிக துல்லியமான கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட்டிருந்தது. தேர்தல் ஆணையத்தின் வாக்கு எண்ணிக்கையின் முடிவுகளும் நமது மின்னம்பலம் கருத்து கணிப்பு முடிவுகளைப் போலவே மிக சரியாக அமைந்திருந்தன.
இதனைத் தொடர்ந்து தற்போதைய தமிழக சட்டசபை தேர்தல் களத்திலும் நமது மின்னம்பலம் மீடியா களமிறங்கியது.
கடந்த மார்ச் 20 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் 400 பேர் வீதம் 234 தொகுதிகளில் 93,600 பேரிடம் வயது, சாதி எண்ணிக்கைகளுக்கு ஏற்ப நடத்தப்பட்ட துல்லியமான கருத்து கணிப்பு முடிவுகளை ஏப்ரல் 9-ந் தேதி மின்னம்பலம் வெளியிட்டது.
இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 23-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற்று முடிவடைந்தது.
இந்த வாக்குப் பதிவுக்கு பின் ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் 200 பேர் வீதம் 234 தொகுதிகளிலும் 46,800 பேரிடம் யாருக்கு வாக்களித்தீர்கள்? என கேட்கப்பட்டது.
234 தொகுதிகளிலும் வாக்குப் பதிவுக்குப் பின்னர் நடத்தப்பட்ட கருத்து கணிப்பு- எக்ஸிட் போல் Exit Poll முடிவுகளை நேற்று ஏப்ரல் 29-ந் தேதி மக்களின் பார்வைக்கு வைத்தோம். .
இந்த தேர்தலில் களம் காணும் அதிமுக பொதுச்செயலாளர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவின் மூத்த தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகளில் முன்னிலை நிலவரம் என்ன?

எடப்பாடி (எடப்பாடி கே. பழனிசாமி): அதிமுக 45%, திமுக 36%. அதிமுகவின் எடப்பாடி கே. பழனிசாமி 9% வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.

மதுரவாயல் (பி. பெஞ்சமின்): திமுக 36%, அதிமுக 30%, தவெக 25%. அதிமுகவின் பி. பெஞ்சமின் 6% வாக்குகள் பின் தங்கி உள்ளார்.

ராயபுரம் (டி. ஜெயக்குமார்): திமுக 33%, அதிமுக 30%, தவெக 32%. அதிமுகவின் டி. ஜெயக்குமார் 3% வாக்குகள் பின் தங்கி உள்ளார்

ஆயிரம் விளக்கு (பி. வளர்மதி): திமுக 36%, அதிமுக 29%, தவெக 28%. அதிமுகவின் பி. வளர்மதி 7% வாக்குகள் பின் தங்கி உள்ளார்.

அண்ணா நகர் (கோகுல இந்திரா): திமுக 31%, அதிமுக 29%, தவெக 24%. அதிமுகவின் கோகுல இந்திரா 2% வாக்குகள் பின் தங்கி உள்ளார்.

ஜோலார்பேட்டை (கே. சி. வீரமணி): அதிமுக 42%, திமுக 37%. அதிமுகவின் கே. சி. வீரமணி 5% வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.

வேப்பனஹள்ளி (கே. பி. முனுசாமி): அதிமுக 39%, திமுக 35%. அதிமுகவின் கே. பி. முனுசாமி 4% வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.

ஓசூர் (பி. பாலகிருஷ்ண ரெட்டி): அதிமுக 37%, திமுக 34%. அதிமுகவின் பி. பாலகிருஷ்ண ரெட்டி 3% வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.

பாலக்கோடு (கே. பி. அன்பழகன்): அதிமுக 40%, திமுக 38%. அதிமுகவின் கே. பி. அன்பழகன் 2% வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.

கலசபாக்கம் (அக்ரி எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி): அதிமுக 40%, திமுக 38%. அதிமுகவின் அக்ரி எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி 2% வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.

மயிலம் (சி. வெ. சண்முகம்): அதிமுக 39%, திமுக 34%. அதிமுகவின் சி. வெ. சண்முகம் 5% வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.

குமாரபாளையம் (பி. தங்கமணி): அதிமுக 41%, திமுக 33%. அதிமுகவின் பி. தங்கமணி 8% வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.

பவானி (கே. சி. கருப்பண்ணன்): அதிமுக 41%, திமுக 37%. அதிமுகவின் கே. சி. கருப்பண்ணன் 4% வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.

திருப்பூர் வடக்கு (எம். எஸ். எம். ஆனந்தன்): அதிமுக 35%, திமுக 32%. அதிமுகவின் எம். எஸ். எம். ஆனந்தன் 3% வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.

தொண்டாமுத்தூர் (எஸ். பி. வேலுமணி): அதிமுக 40%, திமுக 35%. அதிமுகவின் எஸ். பி. வேலுமணி 5% வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.

பொள்ளாச்சி (பொள்ளாச்சி வி. ஜெயராமன்): அதிமுக 41%, திமுக 38%. அதிமுகவின் பொள்ளாச்சி வி. ஜெயராமன் 3% வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.

உடுமலைப்பேட்டை (உடுமலை கே. ராதாகிருஷ்ணன்): அதிமுக 40%, திமுக 34%. அதிமுகவின் உடுமலை கே. ராதாகிருஷ்ணன் 6% வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.

நத்தம் (நத்தம் ஆர். விஸ்வநாதன்): அதிமுக 38%, திமுக 35%. அதிமுகவின் நத்தம் ஆர். விஸ்வநாதன் 3% வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.

திண்டுக்கல் (திண்டுக்கல் சி. சீனிவாசன்): திமுக 35%, அதிமுக 34%, தவெக 24%. அதிமுகவின் திண்டுக்கல் சி. சீனிவாசன் 1% வாக்குகள் பின் தங்கி உள்ளார்.

கரூர் (எம். ஆர். விஜயபாஸ்கர்): திமுக 43%, அதிமுக 36%. அதிமுகவின் எம். ஆர். விஜயபாஸ்கர் 7% வாக்குகள் பின் தங்கி உள்ளார்.

கடலூர் (எம். சி. சம்பத்): அதிமுக 38%, திமுக 35%. அதிமுகவின் எம். சி. சம்பத் 3% வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.

வேதாரண்யம் (ஓ. எஸ். மணியன்): அதிமுக 35%, திமுக 31%. அதிமுகவின் ஓ. எஸ். மணியன் 4% வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.

நன்னிலம் (ஆர். காமராஜ்): அதிமுக 39%, திமுக 35%. அதிமுகவின் ஆர். காமராஜ் 4% வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.

விராலிமலை (சி. விஜயபாஸ்கர்): அதிமுக 44%, திமுக 38%. அதிமுகவின் சி. விஜயபாஸ்கர் 6% வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.

மதுரை மேற்கு (செல்லூர் கே. ராஜூ): திமுக 35%, அதிமுக 33%, தவெக 24%. அதிமுகவின் செல்லூர் கே. ராஜூ 2% வாக்குகள் பின் தங்கி உள்ளார்.

திருமங்கலம் (ஆர். பி. உதயகுமார்): அதிமுக 36%, திமுக 35%. அதிமுகவின் ஆர். பி. உதயகுமார் 1% வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.

சிவகாசி (கே. டி. ராஜேந்திர பாலாஜி): அதிமுக 40%, திமுக 37%. அதிமுகவின் கே. டி. ராஜேந்திர பாலாஜி 3% வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.

ஸ்ரீவைகுண்டம் (எஸ். பி. சண்முகநாதன்): அதிமுக 36%, திமுக 33%. அதிமுகவின் எஸ். பி. சண்முகநாதன் 3% வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.

கோவில்பட்டி (கடம்பூர் ராஜூ): அதிமுக 38%, திமுக 36%. அதிமுகவின் கடம்பூர் ராஜூ 2% வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.

கன்னியாகுமரி (தளவாய்சுந்தரம்): திமுக 36%, அதிமுக 35%. அதிமுகவின் தளவாய்சுந்தரம் 1 சதவீத வாக்கு வித்தியாசத்தில் பின் தங்கி உள்ளார்.

