17-வது தமிழக சட்டசபை தேர்தல் எனும் மிகப் பெரிய ஜனநாயக திருவிழாவில் நமது மின்னம்பலம் மீடியாவும் இணைந்துள்ளது.
2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது மின்னம்பலம் மீடியா மிக துல்லியமான கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட்டிருந்தது. தேர்தல் ஆணையத்தின் வாக்கு எண்ணிக்கையின் முடிவுகளும் நமது மின்னம்பலம் கருத்து கணிப்பு முடிவுகளைப் போலவே மிக சரியாக அமைந்திருந்தன.
இதனைத் தொடர்ந்து தற்போதைய தமிழக சட்டசபை தேர்தல் களத்திலும் நமது மின்னம்பலம் மீடியா களமிறங்கியது.
கடந்த மார்ச் 20 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் 400 பேர் வீதம் 234 தொகுதிகளில் 93,600 பேரிடம் வயது, சாதி எண்ணிக்கைகளுக்கு ஏற்ப நடத்தப்பட்ட துல்லியமான கருத்து கணிப்பு முடிவுகளை ஏப்ரல் 9-ந் தேதி மின்னம்பலம் வெளியிட்டது.
இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 23-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற்று முடிவடைந்தது.
இந்த வாக்குப் பதிவுக்கு பின் ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் 200 பேர் வீதம் 234 தொகுதிகளிலும் 46,800 பேரிடம் யாருக்கு வாக்களித்தீர்கள்? என கேட்கப்பட்டது.
234 தொகுதிகளிலும் வாக்குப் பதிவுக்குப் பின்னர் நடத்தப்பட்ட கருத்து கணிப்பு- எக்ஸிட் போல் Exit Poll முடிவுகளை இன்று ஏப்ரல் 29-ந் தேதி மக்களின் பார்வைக்கு வைத்துள்ளோம்.
தமிழக வெற்றிக் கழகம் (TVK) - 2-வது இடம் பிடிக்க வாய்ப்புள்ள தொகுதிகள்-10
| தொகுதி | தவெக வாக்கு (%) | முன்னிலை பெறும் கூட்டணி | |
| திருச்சி (கிழக்கு) | 35% | திமுக கூட்டணி | |
| வில்லிவாக்கம் | 32% | திமுக கூட்டணி | |
| ராயபுரம் | 32% | திமுக கூட்டணி | |
| அறந்தாங்கி | 31% | திமுக கூட்டணி | |
| எழும்பூர் (தனி) | 30% | திமுக கூட்டணி | |
| தியாகராயநகர் | 30% | அதிமுக கூட்டணி | |
| மயிலாப்பூர் | 29% | அதிமுக கூட்டணி | |
| காரைக்குடி | 27% | திமுக கூட்டணி | |
| கொளத்தூர் | 26% | திமுக கூட்டணி | |
| பாளையங்கோட்டை | 26% | திமுக கூட்டணி |
திமுக 3-வது இடம் பிடிக்கும் வாய்ப்புள்ள தொகுதிகள்
| தொகுதி | திமுக வாக்கு (%) | முன்னிலை பெறும் கூட்டனி | |
| தியாகராயநகர் | 30% | அதிமுக கூட்டணி | |
| டாக்டர்.ராதாகிருஷ்ணன்நகர் | 29% | தவெக | |
| சேலம் மேற்கு | 28% | தவெக | |
அதிமுக (ADMK) - 3-வது இடம் பிடிக்கும் தொகுதிகள்
| தொகுதி | அதிமுக வாக்கு (%) | முன்னிலை பெறும் கூட்டணி | |
| ராயபுரம் | 30% | திமுக கூட்டணி | |
| திருச்செங்கோடு | 30% | தவெக | |
| ஆலங்குளம் | 30% | சமநிலை | |
| கோபிச்செட்டிபாளையம் | 29% | தவெக | |
| எழும்பூர் (தனி) | 28% | திமுக கூட்டணி | |
| அறந்தாங்கி | 28% | திமுக கூட்டணி | |
| வில்லிவாக்கம் | 26% | திமுக கூட்டணி | |
| திருச்சி (கிழக்கு) | 25% | திமுக கூட்டணி | |
| பாளையங்கோட்டை | 25% | திமுக கூட்டணி | |
| கொளத்தூர் | 22% | திமுக கூட்டணி | |
| பெரம்பூர் | 10% | தவெக |

