தமிழ்நாட்டில் நடைபெறும் மக்களவை தேர்தலுடன் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள விளவங்கோடு சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தலும் நடைபெறுகிறது.
கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக மூன்று முறை வெற்றி பெற்று இத்தொகுதியில் எம்.எல்.ஏவாக இருந்த விஜயதாரணி தனது பதவியை ராஜினாமா செய்து பாஜகவில் இணைந்ததால், விளவங்கோடு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்தலில் விளவங்கோடு தொகுதியில் திமுககூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் தாரகை கத்பர்ட் வேட்பாளராக களமிறங்கியுள்ளார். பாஜக சார்பில் விஎஸ் நந்தினி போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் ராணி போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் ஜெமினி போட்டியிடுகிறார்.
நான்கு முனை போட்டி நிலவும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் மக்களின் வாக்குகள் யாருக்கு? களத்தின் நிலவரம் என்ன? என்பதை நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.
உங்கள்மனதைவென்றவேட்பாளர்யார்என்றகேள்வியினைபரவலாக விளவங்கோடு சட்டமன்றத் தொகுதிமக்களிடம்முன்வைத்தோம்.
இத்தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில்நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின்அடிப்படையில்…

காங்கிரஸ்வேட்பாளர் தாரகை கத்பர்ட் 45% வாக்குகளைப்பெற்று விளவங்கோடுதொகுதியில்முன்னிலையில்நிற்கிறார்.

