Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
முக்கிய நிர்வாகி விலகல் : நெருக்கடியில் ஜி.கே.வாசன்

முக்கிய நிர்வாகி விலகல் : நெருக்கடியில் ஜி.கே.வாசன்

Minnambalam 2 years ago

பாஜகவுடன் கூட்டணி அமைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் மாநில காங்கிரஸ் முக்கிய நிர்வாகியான அசோகன் கட்சியில் இருந்து இன்று (பிப்ரவரி 26) விலகி உள்ளார்.

இதுதொடர்பாக த.மா.கா கட்சியின் தலைவர் ஜி.கே.வாசனுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், "நான் பாரம்பரிய காங்கிரஸ் குடும்பத்தைச் சார்ந்தவன். என் தந்தை ஒரு சுதந்திர போராட்ட தியாகி, 1980ல் நடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக நின்று வெற்றி வாய்பை இழந்தவர். அவரைத் தொடர்ந்து நானும் என்னை காங்கிரஸ் பேரியக்கத்தில் இணைத்துக் கொண்டு செயலாற்றி வந்துள்ளேன்.

 டி.என்.அசோகன்

1996ல் மறைந்த மக்கள் தலைவர் ஜி.கே.மூப்பனார் எடுத்த அரசியல் ரீதியான முடிவை அன்று ஏற்றுக் கொண்டு அவருடன் தமிழ் மாநில காங்கிரஸில் பயணித்து அதில் மாநில பொதுக்குழு மற்றும் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி வந்துள்ளேன்.

அதே போல அவருடைய மறைவுக்கு பின் அவருடைய மகனாகிய உங்களின் தலைமையை ஏற்று கட்சியின் தலைமை நிலை செயலாளராக இன்று வரை பணியாற்றி வந்துள்ளேன்.

தற்போதைய அரசியல் சூழ்நிலையில் நீங்கள் எடுத்துள்ள பா.ஜ.க கூட்டணி என்பது எனக்கு உளவியல் ரீதியாக ஏற்புடையதாக இல்லை. எனவே கனத்த இதயத்துடன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியிலிருந்து இன்று முதல் விலகிக் கொள்ள முடிவு செய்துள்ளேன். என்னுடைய முடிவை ஏற்றுக் கொள்ளும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்" என்று அசோகன் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே பாஜகவுடனான கூட்டணியை இன்று ஜி.கே.வாசன் அறிவித்த நிலையில், தமாகா இளைஞரணித் தலைவர் யுவராஜா அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க சென்றது பரபரப்பை ஏற்படுத்தியிருந்து.

இந்த நிலையில் தலைமை நிலை செயலாளராக பணியாற்றி வந்த அசோகன் கட்சியிலிருந்து விலகியுள்ளது ஜி.கே.வாசனுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

"மூப்பனாரின் ஆத்மா ஜி.கே.வாசனை மன்னிக்காது" : செல்வ பெருந்தகை

மீண்டும் இணையும் 'பொன்னியின் செல்வன்' ஜோடி… இயக்குநர் யாருன்னு பாருங்க!

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam