Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
முதலில் ஓபிஎஸ் வழக்கு. பிறகு பொன்முடி வழக்கு." : நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு!

முதலில் ஓபிஎஸ் வழக்கு. பிறகு பொன்முடி வழக்கு." : நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு!

Minnambalam 2 years ago

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர் பொன்முடி மீது தாமாக முன் வந்து பதிவு செய்த வழக்குகளை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ஒத்திவைத்துள்ளார்.

2001-2006 அதிமுக ஆட்சி காலத்தில் வருவாய் துறை அமைச்சராக பதவி வகித்த ஒ.பன்னீர்செல்வம், வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 77 லட்சம் ரூபாய் சொத்துக்கள் குவித்ததாக, 2006-ல் திமுக ஆட்சி காலத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கில் பன்னீர்செல்வம் அவரது மனைவி மறைந்த விஜயலட்சுமி, மகன் ரவீந்திரநாத், சகோதரர் ஓ.ராஜா உள்ளிட்டோரை சிவகங்கை நீதிமன்றம் விடுவித்தது. குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் இல்லை என்ற லஞ்ச ஒழிப்புத் துறையின் அறிக்கையை ஏற்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யும் வகையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தார்.

இதை எதிர்த்து ஓபிஎஸ் உச்ச நீதிமன்றம் சென்ற நிலையில் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

சென்னை உயர் நீதிமன்ற வழக்கில் பன்னீர்செல்வம் தரப்பில் வாதங்கள் முடிக்கப்பட்ட நிலையில் குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்கள் தரப்பில் வாதங்களை முன் வைக்க விசாரணை இன்று தள்ளிவைக்கப்பட்டிருந்தது.

அதன்படி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் வாதங்களை முன்வைக்க அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்று விசாரணையை ஏப்ரல் 22ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

அதேபோல,சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடியை விடுதலை செய்த வேலூர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கின் விசாரணையை ஜூன் மாதத்துக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தள்ளிவைத்தார்.

பொன்முடி மீதான வழக்கை ஏப்ரல் 15 முதல் 19 வரையிலான தேதிகளில் இறுதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக ஏற்கனவே நீதிபதி தெரிவித்திருந்தார்.

ஆனால் ஓபிஎஸ் மீதான வழக்கை விசாரித்த பிறகு அமைச்சர் பொன்முடி மீதான விசாரிப்பதாக கூறி அதை ஜூன் மாதத்திற்கு ஒத்திவைப்பதாக நீதிபதி கூறியுள்ளார்.

பிரியா

அமைச்சர் அனிதா மீது ஆவுடையப்பன் புகார்! சாதிச் சண்டையாகிறதா நெல்லை தேர்தல் களம்?

"தோனி வென்ற 3 ஐசிசி கோப்பைகளுக்கு எதுவும் ஈடாகாது" : கம்பீர் புகழாரம்!

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam