Dailyhunt
முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க. ஸ்டாலின்

முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க. ஸ்டாலின்

Minnambalam 6 days ago

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

17 ஆவது தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

திமுக 59 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட 16 அமைச்சர்கள் தோல்வியடைந்துள்ளனர்.

இந்நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆளுநர் ராஜேந்திர அர்லேகருக்கு ராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார். கவர்னர் மாளிகைச் செயலாளர் மூலமாக அந்தக் கடிதம் பெறப்பட்டு, ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

இதைத் தொடர்ந்து ஆளுநர் த.வெ.க.வை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. த.வெ.க.வுக்கு பெரும்பான்மைக்குத் தேவையான 11 இடங்கள் குறைவாக உள்ள நிலையில், விரைவில் சட்டசபையைக் கூட்டி தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam