Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
நாடாளுமன்றத் தேர்தல் 2024: மின்னம்பலம் மெகா சர்வே  முடிவுகள் - ஏப்ரல் 14 முதல்.

நாடாளுமன்றத் தேர்தல் 2024: மின்னம்பலம் மெகா சர்வே முடிவுகள் - ஏப்ரல் 14 முதல்.

Minnambalam 2 years ago

சூடு பிடிக்கிறது அரசியல் களம்!

திர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள், எந்த கூட்டணி பெரும்பான்மையான தொகுதிகளைக் கைப்பற்றப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் இருக்கிறது.

மக்களின் மனதை வென்ற வேட்பாளர் யார் என்பதைக் கணித்துச் சொல்வதற்கு தமிழ்நாடு முழுவதும் பயணித்து கருத்துக்கணிப்பை மேற்கொண்டது மின்னம்பலம்.

தமிழ்நாட்டில் ஒவ்வொரு மக்களவைத் தொகுதியும் 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியிருக்கிறது. அந்த வகையில் தமிழ்நாடு முழுதும் 39 மக்களவைத் தொகுதிகளில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் மின்னம்பலம் சார்பாக மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. புதுச்சேரி மக்களவைத் தொகுதியிலும் மின்னம்பலம் குழுவினர் கருத்துகணிப்பு நடத்தினர்.

இதைத் தவிர இடைத்தேர்தலை எதிர்கொள்ளும் கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியிலும் சர்வே மேற்கொள்ளப்பட்டது.

ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 100 பேர் என்று 6 தொகுதிகளைக் கொண்ட ஒரு மக்களவைத் தொகுதிக்கு 600 பேரிடம் கருத்து கேட்கப்பட்டது.

18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்- பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.

மொத்தமாக தமிழ்நாடு முழுதும் 23,400 பேரிடம் நடத்தப்பட்ட மின்னம்பலம் மெகா சர்வே முடிவுகள் ஒவ்வொரு தொகுதியாக நாளை (ஏப்ரல் 14) முதல் தொடர்ந்து வெளியிடப்பட உள்ளது.

மொத்தமாக தமிழ்நாட்டில் எந்தெந்த கூட்டணி எத்தனை சதவீத வாக்குகளைப் பெற உள்ளது என்பதையும் மின்னம்பலம் வெளியிட உள்ளது.

சர்வே முடிவுகளைத் தெரிந்துகொள்ள minnambalam.com இணையத்திலும்,மின்னம்பலம் யூடியூப் சேனலிலும் தொடர்ந்து இணைந்திருங்கள்.

GOAT: பர்ஸ்ட் சிங்கிள் பாடகர் இவர்தானாம்… அட Youtube-ஏ அதிர போகுது..!

பிரணவ் - நிவின் பாலியின் வருஷங்களுக்கு சேஷம் - திரை விமர்சனம்!

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam