Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
நாதக கார்த்திகாவுக்கு ஜாமீன்!

நாதக கார்த்திகாவுக்கு ஜாமீன்!

Minnambalam 7 hrs ago

நாம் தமிழர் கட்சி கார்த்திகாவுக்கு தாராபுரம் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது.

தாராபுரம் சட்டப்பேரவை தொகுதியில் கடந்த அக்டோபர் 6ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் மகளிர் அணியை சேர்ந்த கார்த்திகா போட்டியிட்டார்.

இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளருக்கு ஆதரவாக முதல்வர் விஜய் வாக்கு சேகரிக்க வந்த போது மறியலில் ஈடுபட்டதாகவும், திமுக தலைவர் ஸ்டாலின் சாலை வலம் சென்ற பாதையில், அனுமதி அளிக்கப்படாத இடத்தில் இடையூறாக வைக்கப்பட்டிருந்த நாதக பேனரை அகற்றியபோது போலீசாரை அவதூறாக பேசியதாகவும் கூறி கார்த்திகா மீது 4 வழக்குகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த நிலையில் கடந்த அக்டோபர் 20ஆம் தேதி கார்த்திகா அவரது கணவர் உட்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் கார்த்திகா உள்ளிட்டோர் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது கார்த்திகா சார்பில், வீட்டில் குழந்தைகள் இருப்பதாகவும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

காவல்துறை சார்பில், ஆதாரங்களின் அடிப்படையில் தான் வழக்கு பதிவு செய்யப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் கார்த்திகாவின் கோரிக்கை ஏற்று அவர் உட்பட கைதான ஒன்பது பேருக்கும் தாராபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam