Dailyhunt
நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண ஆவணப் படம் : ட்ரெய்லர் நாளை வெளியீடு!

நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண ஆவணப் படம் : ட்ரெய்லர் நாளை வெளியீடு!

Minnambalam 1 year ago

டிகை நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் மற்றும் காதல் உருவானது குறித்தான ஆவணப் படமான 'நயன்தாரா : பியாண்ட் தி ஃபேரி டேல்' படத்தின் ட்ரெய்லர் நாளை(நவ.9) வெளியாகிறது.

கடந்த 2022ஆம் ஆண்டு நடிகை நயன்தாரா - இயக்குநர் விக்னேஷ் சிவன் தம்பதியின் திருமண நிகழ்வு பிரம்மாண்டமாக நடந்தேறியது. பல திரை நட்சத்திரங்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இதைத் தொடர்ந்து , நயன்தாரா - விக்னேஷ் சிவன் இடையே காதல் உருவான கதை முதல் திருமண நிகழ்வு வரையான சம்பவங்களைத் தொகுத்த ஆவணப் படம் ஒன்று நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அப்போதே அறிவிக்கப்பட்டது. ஆனால், பல காரணங்களால் அந்த ஆவணப் படத்தின் வெளியீடு தள்ளிப்போனது.

இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு இந்த ஆவணத் திரைப்படம் வருகிற நவ.18ஆம் தேதி நடிகை நயன்தாராவின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. தற்போது அந்த ஆவணப் படத்தின் டிரெய்லர் நாளை வெளியாவதாக நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளம் தெரிவித்துள்ளது.

இந்தப் படத்தில் பார்வையாளர்கள் இதுவரை பார்க்காத நடிகை நயன்தாராவின் மறுபக்கம் கூறப்பட்டுள்ளது. மேலும், ஒரு மகளாக, சகோதரியாக, இணையராக, தாயாக, நண்பராக , திரைத்துறையின் தவிர்க்கமுடியா ஆளுமையாக அவர் உருவான பயணக் கதையும் இதில் இடம்பெற்றுள்ளது.

நடிகை நயன்தாரா தற்போது இயக்குநர் சஷிகாந்த் இயக்கத்தில் உருவாகும் 'டெஸ்ட்' படத்தில் நடித்து வருகிறார். இதில், மாதவன், மீரா ஜாஸ்மின், சித்தார்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும், இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் 'மூக்குத்தி அம்மன் - 2', கன்னட நடிகர் யஷ் நடிக்கும் 'டாக்ஸிக்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- ஷா

உதவிக்கு ஓடோடி வருபவர் நெப்போலியன் : குஷ்பு

தனுஷ் - ராஜ்குமார் பெரியசாமி இணையும் 'D55' ! : அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Minnambalam